பாஜகவினர் புரளியை கிளப்புகின்றனர்... பதவியை ராஜினாமா செய்யவில்லை: இமாச்சல் முதல்வர் மறுப்பு!

சுக்விந்தர் சிங்
சுக்விந்தர் சிங்

மெஜாரிட்டி இழந்ததால் முதல்வர் பதவியை சுக்விந்தர் சிங் சுகு ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், தான் ராஜினாமா செய்யவில்லை என்றும் பாஜகவினர் வதந்தியை பரப்பிவிட்டதாகவும் முதல்வர் சுக்விந்தர் சிங் தெரிவித்தார்.

இமாச்சல் பிரதேச சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 68 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்எல்ஏ-க்களும், பாஜக-வுக்கு 25 எம்எல்ஏ-க்களும் உள்ளனர். சுயேச்சைகள் மூவர் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகுவிற்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களாக முதலமைச்சர் சுக்விந்தர் மீது காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், 6 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும், சுயேச்சைகள் மூவரும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி தோல்வி அடைந்தார். பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார். இதையடுத்து கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

சுக்விந்தர் சிங்
சுக்விந்தர் சிங்

இந்நிலையில், முதல்வர் சுக்விந்தர் சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. பிரதிபா சிங்கின் மகனும், மாநில பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவருமான விக்கிரமாதித்ய சிங் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அரசுக்கு எதிராக பாஜகவினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அந்த தீர்மானத்தை ஏற்க வலியுறுத்தி சபாநாயகர் அறை முன் அமளியில் ஈடுபட்டதாக 15 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

இதற்கிடையே, மெஜாரிட்டி இழந்ததால் முதல்வர் பதவியை சுக்விந்தர் சிங் சுகு ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், தான் ராஜினாமா செய்யவில்லை என்றும் பாஜகவினர் வதந்தியை பரப்பிவிட்டதாகவும் முதல்வர் சுக்விந்தர் சிங் தெரிவித்தார். மேலும், நம்பிக்கைத் தீர்மானத்தில் தனது அரசு வெற்றிபெறும் என்றும் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலரின் பாஜக ஆதரவு நிலைப்பாடு, அரசியல் குழப்பங்கள் காரணமாக அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. குழப்பத்தைத் தீர்த்து ஆட்சியைத் தக்கவைக்க கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை இமாச்சல பிரதேசத்துக்கு காங்கிரஸ் மேலிடம் அனுப்பியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இந்திய நிறுவனங்கள் 10% சம்பள உயர்வை அறிவிக்கும்... குஷிப்படுத்திய கருத்து கணிப்பு முடிவுகள்!

படப்பிடிப்பில் நடிகையை அடித்த இயக்குநர் பாலா...பரபரப்பு வீடியோ!

தமன்னாவுக்கே டஃப் கொடுக்கும் யானை... காவாலா பாட்டுக்கு கலக்கல் டான்ஸ்!

லீக்கானது ’வேட்டையன்’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ... போலீஸ் சீருடையில் மாஸாக வரும் ரஜினி!

அடடே மனோகர் திடீர் மறைவு... ஆழ்ந்த சோகத்தில் ரசிகர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in