பாஜக வேட்பாளர்களுக்காக தெலங்கானாவுக்கு படையெடுத்த குஜராத், உத்தராகண்ட் முதல்வர்கள்!

தெலங்கானாவில் பாஜகவுக்கு ஆதரவாக முதல்வர்கள் புஷ்கர் சிங் தாமி, பூபேந்திர படேல் பிரச்சாரம்
தெலங்கானாவில் பாஜகவுக்கு ஆதரவாக முதல்வர்கள் புஷ்கர் சிங் தாமி, பூபேந்திர படேல் பிரச்சாரம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் தெலங்கானாவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நாடு முழுவதும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பல மாநிலங்கள் பல்வேறு கட்ட தேர்தலையும் சந்திக்கும் நிலை உள்ளது. ஒரு மாநிலத்தில் தேர்தல் முடிவடைந்தால் மற்றொரு மாநிலத்தில் தேர்தல் பிரச்சார குரல் எதிரொலிக்கிறது.

நிஜமாபாத்தில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி
நிஜமாபாத்தில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி

இந்நிலையில் பாஜக ஆளும் குஜராத் மற்றும் உத்தராகண்ட் மாநில முதல்வர்கள், தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தெலங்கானாவில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கரீம் நகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரான அக்கட்சியின் பொதுச் செயலாளர் பண்டி சஞ்சய் குமார் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய அமைச்சரும், தெலங்கானா பிரிவு பாஜக தலைவருமான ஜி. கிஷன் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். பின்னர், அவர்கள் அப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், நிஜாமாபாத் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் டி. அரவிந்த் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பாஜக எம்பி- கே. லட்சுமணன் ஆகியோர் பங்கேற்றனர்.

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குஜராத் முதல்வர் பூபேந்திர
தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குஜராத் முதல்வர் பூபேந்திர

குஜராத் மற்றும் உத்தரகண்ட் முதலமைச்சர்கள் சாலை பேரணி சென்று பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினர்.

தெலங்கானா மாநிலத்தில் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் வரும் மே 13ம் தேதி நடைபெறும் 4ம் கட்டத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு... பிரகாஷ் ராஜ், ராகுல் டிராவிட் ஆகியோர் வாக்குகளை செலுத்தினர்

கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?

13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!

பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in