கோட்சேவுடன் ஆளுநரை தொடர்புபடுத்தி பேசினார் சபாநாயகர்... ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு!

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

கோட்சேவுடன் ஆளுநரை  தொடர்புபடுத்தி தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு பேசியதாக ஆளுநர் மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.

சட்டமன்றத்தில் ஆளுநர்
சட்டமன்றத்தில் ஆளுநர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024 ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தொடர் தேசிய கீதத்துடன் தொடங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி ஆளுநர் ரவி அரசாங்கம் தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்க மறுத்துவிட்டார். அதனையடுத்து சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்து முடித்தார்.

உரையை வாசித்து முடித்த பிறகு ஆளுநர் குறித்தும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துப் பேசினார். அதையடுத்து ஆளுநர் ரவி அவையை விட்டு உடனடியாக வெளியேறினார். இந்தநிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இன்றைய நடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விரிவான விளக்க அறிக்கையை  வெளியிட்டுள்ளது

அதில் 'உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம்பெற்று இருந்ததால் அந்த உரையை ஆளுநர் வாசிக்கவில்லை.  பிப்ரவரி 9 ம் தேதியன்று மாநில அரசிடம் இருந்து  பெறப்பட்ட உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்தன. ஆளுநர் உரையில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை சுட்டிக்காட்டியும் அந்த அறிவுறுத்தலை ஏற்று சுட்டிக்காட்டிய தவறுகள் திருத்தப்படவில்லை. தவறான தகவல்களுடன் உண்மைக்கு புறம்பாக தகவல்கள் இருந்ததால் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை படிக்கவில்லை. தவறான தகவல்களை படிப்பது அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கிவிடும். தவறான அறிக்கைகள், பாகுபாடான அரசியல் கருத்துகளை வெளியிடுவதாக ஆளுநர் உரை இருக்கக் கூடாது.  ஆளுநரின் உரையானது அரசாங்கத்தின் சாதனைகள், கொள்கைகள், திட்டங்களை பிரதிபலிக்க வேண்டும்.

உரையின் தொடக்கம், முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கடந்த காலங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநரின் ஆலோசனைகளை புறக்கணிக்க வேண்டும் என அரசு தீர்மானித்துள்ளது.  சபாநாயகர் தனது செயல்பாடுகளால் பேரவை, மற்றும் சபாநாயகர் பதவிக்கான கண்ணியத்தை குறைத்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

உரை வாசித்து முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று எழுந்து நின்றபோது  தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு பதிலாக ஆளுநரை சபாநாயகர் வசை பாடினார். அத்துடன் கோட்சேவுடன் ஆளுநரை தொடர்புபடுத்தி  அவதூறாக பேசினார். கோட்சேவை பின்பற்றக் கூடியவர் என்று அவர் பேசினார்.  சபாநாயகர் அவதூறாக பேசியதால் சபையின் கவுரவம் கருதி ஆளுநர் அந்த அவையிலிருந்து வெளியேறினார்' என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முடிவாகிறது தொகுதிகளின் எண்ணிக்கை... மூன்று கட்சிகளுடன் திமுக பேச்சு!

தமிழகத்தில் எமர்ஜென்சியா...? பகீர் கிளப்பிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

அயோத்தி செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்... பஞ்சாப் முதல்வருடன் ராமர் கோயிலில் வழிபாடு!

தமிழகமே அதிர்ச்சி... ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in