
பாலின சமத்துவம்தான் உண்மையான சமத்துவம் என்றும் பாலின சமத்துவம் இல்லையென்றால் சமூகத்தில் சமத்துவம் இருக்காது என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
'இந்திய நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கு' என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கு மகத்தானது. அவர்களின் இருப்பு தானாகவே நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் நல்ல சூழலை அதிகரிக்கும். பெண்கள் தாங்கள் வாழும் வாழ்க்கையின் மதிப்புமிக்க அனுபவங்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் தங்களின் பணியில் ஈடுபடுத்த முடியும். இது நிச்சயமாக பெரிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழிவகுக்கும். கொள்கைகளின் பரிணாம வளர்ச்சிக்கும் நிர்வாகத்துக்கும் இது உதவும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது வரலாற்றில் ஒரு சகாப்தமாக விளங்குகிறது. நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல இது ஒரு பெரிய முன் முயற்சி. நமது நாடு அதன் சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும்போது, நாம் உச்சத்தில் இருப்போம் என்பதை இது உறுதி செய்யும். மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டபோது 17 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை மாநிலங்களவையை வழி நடத்தத் தேர்ந்தெடுத்தேன்.
சமூகத்தில் எல்லாத்துறைகளிலும் பெண்களுக்கு உரிய பங்கும் சம உரிமையும் அளிக்கப்பட வேண்டும். பாலின சமத்துவமே உண்மையான சமத்துவம். பாலின சமத்துவம்தான் எல்லா சமத்துவத்துக்கும் அடிப்படை. பாலின சமத்துவம் இல்லாவிட்டால் சமூகத்தில் சமத்துவம் இருக்காது.
2019 பொதுத் தேர்தலில் மக்களவையில் அதிக எண்ணிக்கையிலான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த ஆண்டுகளில் பிரதமரின் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த பல முன் முயற்சிகள் இதற்கு காரணமாக இருந்துள்ளன. பெண் தலைவர்களை ஆக்கிரமித்து அவர்களை ஆண்களே இயக்கும் நிலை பெரும்பாலும் போய்விட்டது. இப்போது பெண் பிரதிநிதிகளுக்கான இருக்கையை அவர்களுக்கே உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் வாசிக்கலாமே...
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி!
ஊழல் பணம் ரூ.1 லட்சம் கோடியை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம்... ராகுல் காந்தி வாக்குறுதி!
பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!
விபத்துக்குள்ளான கார்... காப்பாற்றத் துடிக்காமல் மதுப்புட்டிகளை அள்ளிச் சென்ற மக்கள்!
வயிற்று வலி மருந்து என ஹேர் டை குடித்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!