எம்.பி சீட்டை அதிக விலைக்கு விற்று வருகிறார் வாசன்... முன்னாள் எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு!

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பாஜகவில் இருந்து வாங்கிய மக்களவைத் தொகுதி சீட்களை அதிக விலைக்கு விற்று வருகிறார் என்று கட்சி முன்னாள் எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக கூட்டணி
பாஜக கூட்டணி

ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ஈரோடு தொகுதியில் பி.விஜயகுமார் என்பவரும்,  ஸ்ரீபெரும்புதூரில் வேணுகோபால் என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.  தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கு அந்த கட்சியில் போட்டி நிலவியது.  அதன் பின்னர் ஒரு வழியாக கட்சிக்காரர்களை சமாதானப்படுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியானது.

தூத்துக்குடி வேட்பாளர் மற்றும் ஜி.கே.வாசன்
தூத்துக்குடி வேட்பாளர் மற்றும் ஜி.கே.வாசன்

இதனால் அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும், தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவருமான கதிர்வேல் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால், கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள அவர் வாசனை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜகவிடம் பேரம் பேசி மூன்று இடங்களை வாங்கிய ஜிகே வாசன் அவற்றை அதிக விலைக்கு விற்று வருகிறார் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் ஐம்பது ஆண்டுகளாக இருந்தேன், பிறகு தமாகா தொடங்கியதிலிருந்து இருந்து வருகிறேன். தமாகாவை பொறுத்தமட்டில் தோற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டேன். ஆனால் என்னைவிட கூடுதலான விலைக்கு கேட்டவருக்கு வாசன் சீட்டை விற்றுவிட்டார் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் வாழப்பாடி, மூப்பனார் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தவர் கதிர்வேல். அந்த வழியில் வாசனுடனும் மிக நல்ல நட்பு கொண்டிருந்தார். கட்சிக்காரர்களுடனும், பிற கட்சித் தலைவர்களுடன் நல்ல நட்பு கொண்டவராக இருந்த அவர் தனக்கு சீட் வழங்கவில்லை என்று கட்சியை விட்டு விலகியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள் தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரின் விலகலையடுத்து கோயில்பட்டி நகர தலைவரான கே.பி.ராஜகோபால் தற்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in