அதிர்ச்சி... பாஜக முன்னாள் எம்எல்ஏ மாரடைப்பால் மரணம்

குஞ்ஜா சத்யவதி
குஞ்ஜா சத்யவதி

தெலங்கானா பாஜக முன்னாள் எம்எல்ஏவான குஞ்ஜா சத்யவதி மாரடைப்பால் இன்று காலமானார்.

தெலங்கானாவில் பத்ராசலம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர் குஞ்ஜா சத்யவதி. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர், தேர்தலில் வெற்றி பெற்று 2009 முதல் 2014 ஆண்டு வரை எம்எல்ஏவாக பதவி வகித்தவர். இதன்பின்னர் அவர், பாஜகவில் சேர்ந்து கட்சி பணியாற்றினார்.

இந்நிலையில், குஞ்ஜா சத்யவதிக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் வழியிலேயே உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மத்திய அமைச்சர் மற்றும் தெலங்கானா பாஜக தலைவர் கிஷன் ரெட்டி, தெலங்கானா காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டவர்கள் இரங்கல்கள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in