ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடைசி உரை இதுவாகவே இருக்கும்; ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆவேசம்!

ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈவிகேஎஸ் இளங்கோவன்

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு பட்டை அணிந்து இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ரவி உரையுடன் இந்த கூட்டம் துவங்குயுள்ளது. வருகிற பிப்ரவரி 19ம் தேதி தமிழ்நாடு அரசின் சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

இதனிடையே தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவை கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இந்த கூட்டத்துடன் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத நிகழ்வுகள் 4 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பட்டையுடன் சட்டப்பேரவைக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
கருப்பு பட்டையுடன் சட்டப்பேரவைக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் இரண்டு நிமிடத்தில் தனது உரையை முடித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையின் முழு பகுதியையும் தற்போது வாசித்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரோடு கிழக்குத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இதுவே ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடைசி ஆளுநர் உரையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முடிவாகிறது தொகுதிகளின் எண்ணிக்கை... மூன்று கட்சிகளுடன் திமுக பேச்சு!

தமிழகத்தில் எமர்ஜென்சியா...? பகீர் கிளப்பிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

அயோத்தி செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்... பஞ்சாப் முதல்வருடன் ராமர் கோயிலில் வழிபாடு!

தமிழகமே அதிர்ச்சி... ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in