பழனிசாமி புறப்பட்டதுமே பழங்களை பறிக்க முண்டியடித்த அதிமுகவினர்... வைரலாகும் வீடியோ!

சேலத்தில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
சேலத்தில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

சேலத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர்மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 105 டிகிரிக்கு மேல் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும், அரசும் அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நீர்மோர் பந்தல் திறக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் சேலம் சூரமங்கலம் பகுதி கழக அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா சேலம் ஜங்ஷன் மாரியம்மன் கோயில் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, கம்மங்கூழ், நுங்கு, இளநீர் போன்றவற்றை வழங்கினார். அப்போது ஏராளமானோ முண்டியடித்துக் கொண்டு நீர்மோர் வாங்க பந்தலுக்குள் புகுந்ததால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

பழங்களை பிடுங்க்கொண்டு சென்ற அதிமுகவினர்
பழங்களை பிடுங்க்கொண்டு சென்ற அதிமுகவினர்

மேலும், ஜங்ஷன் பிரதான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் காவல்துறையினர் போக்குவரத்தை சீர்படுத்தினர். இதனிடையே நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து கிளம்பிய சூட்டோடு அதிமுகவினர் நீர்மோர் பந்தலுக்குள் புகுந்து அங்கு அலங்காரத்திற்காக தொங்கவிட்டிருந்த பழங்கள், இளநீர் போன்றவற்றை அடித்துப் பிடித்து பறித்துச் சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு... பிரகாஷ் ராஜ், ராகுல் டிராவிட் ஆகியோர் வாக்குகளை செலுத்தினர்

கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?

13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!

பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in