5 மாநில சட்டப்பேரவை தேர்தல்
5 மாநில சட்டப்பேரவை தேர்தல்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு... அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நவம்பர் 7ம் தேதி முதல் 30-ம் தேதி மாலை வரை வெளியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மிசோரத்தில் நவம்பர் 7ம் தேதி துவங்கும் தேர்தல், தெலங்கானாவில் 30ம் தேதி நிறைவு பெறுகிறது. டிசம்பர் 3ம் தேதி 5 மாநிலத்திலும் வாக்கு எண்ணிக்கை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளின் ஒரு பகுதியாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடுவது தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு தடை
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு தடை

இதன்படி, நவம்பர் 7 ம் தேதி முதல் 30-ம் தேதி மாலை வரை மாநிலங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பல கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதால் ஒரு மாநிலத்தின் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் பிற மாநில தேர்தலிகளில் தாக்கத்தை உண்டாக்கக் கூடாது என்பதற்காக ஆணையம் இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கிறது. 30-ம் தேதி தெலங்கானாவில் ஒரே நாளில் கடைசி கட்ட தேர்தல் நடக்கிறது. அதற்கான வாக்குப் பதிவுகள் முடியும் வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட முடியாது.

ஐந்து மாநில தேர்தல்களில் சுமார் 16 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். சத்தீஸ்கரில் 2 கட்டங்களாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 200 தொகுதிகளும், குறைந்தபட்சமாக மிசோரத்தில் 40 தொகுதிகளும் உள்ளன.

நவம்பர் 7 முதல் 30 வரை 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்
நவம்பர் 7 முதல் 30 வரை 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்
x
காமதேனு
kamadenu.hindutamil.in