அமைச்சர் நேரு என்னையும் அவரது மகனாகத்தான் பார்க்கிறார்... திருச்சியில் துரை வைகோ நெகிழ்ச்சி!

வேட்புமனு தாக்கல் செய்யும் துரை வைகோ
வேட்புமனு தாக்கல் செய்யும் துரை வைகோ

”அமலாக்கத்துறை, சிபிஐ போன்றே தேர்தல் ஆணையமும் ஜனநாயகப் படுகொலையை நடத்துகிறது” என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சியில் துரை வைகோ
திருச்சியில் துரை வைகோ

திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் துரை வைகோ இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, தேர்தல் ஆணையத்தை சின்னம் வழங்கும் விவாகரத்தை வைத்து கடுமையாக குற்றம்சாட்டினார்.

வைகோ
வைகோ

இது விஷயமாக சீற்றமாகப் பேசிய துரை வைகோ, ”திமுக கூட்டணியில் மதிமுக, விசிக கட்சிகளுக்கு இதுவரை சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை. இதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். நாளைக்குள் உரிய முடிவு காணப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அமலாக்கத்துறை, சிபிஐ போன்றே தேர்தல் ஆணையமும் ஜனநாயக படுகொலையை நடத்துகிறது” என்றார்.

அதைத் தொடர்ந்து, திருச்சியில் நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தின்போது துரை வைகோ பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். "நேற்று நடைபெற்ற கசப்பான சம்பவங்களை  நான் மறந்து விட்டேன். எனக்கு தற்போது இருக்கும் எண்ணமெல்லாம் வெற்றி  என்ற ஒரே இலக்கு மட்டும் தான். அதை நோக்கி தான் நாங்கள் அனைவரும் பயணிக்கிறோம். நேற்று நடந்த சம்பவம் குறித்து வைகோவிடம் எதுவும் நான் பேசவில்லை.

எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை. அமைச்சர் நேரு அவரது மகன் அருண் நேருவை போலவே என்னையும் ஒரு மகனாக நினைக்கிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் வரை வந்து என்னை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். எனது வெற்றிக்காக அவர் மிகக் கடுமையாக உழைக்கிறார்" என்றார்.

இந்த நிலையில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் அவசர  முறையீட்டு மனுவை நாளை சென்னை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்கிறது. மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்படுமா என தேர்தல் ஆணையம் நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது. 

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in