என் வீட்டுக்கு எவ்வளவு மின் கட்டணம் தெரியுமா?- `ஷாக்’ கொடுத்த மத்திய இணை அமைச்சர்!

எல்.முருகன்
எல்.முருகன்

தமிழக அரசு மின்சாரக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளதால் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலக்கட்டத்தில் கூட நமது தொழில் முனைவோர்களை காப்பாற்றியவர் பிரதமர் மோடி. ஆனால் இன்றைக்கு தமிழக அரசு 40 மடங்கு மின் கட்டணத்தை உயர்த்தி யாரும் தொழில் செய்ய முடியாத நிலையை உருவாக்கியுள்ளனர்.

இதனால் பலர் தங்களது தொழில் நிறுவனங்களை மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பலர் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். வங்கி கடன் வாங்கி முதலீட்டாளர்கள் தங்களது தொழிலை மேம்படுத்தி வரும் நிலையில் அவர்களது தலையில் பேரிடியாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துள்ளது தமிழக அரசு.

தமிழக அரசு தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை குறைப்பத்தோடு மட்டுமல்லாமல், வீடுகளுக்கும் கட்டணக் குறைப்பு செய்ய வேண்டும். என்னுடைய வீட்டிற்கு மாதம் 3 ஆயிரம் தான் கட்டணம் வரும். ஆனால் இந்த மாதம் 10 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. ஏழை மக்கள் எல்லாம் இன்றைக்கு மின்சார கட்டணத்தை பார்த்து ஷாக் அடித்து போயுள்ளார்கள். அதனால் அனைத்து கட்டண உயர்வையும் திரும்பப் பெற வேண்டும்’’ என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!

பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!

விஜய்சேதுபதி, மஞ்சுவாரியருக்காக புது டெக்னாலஜி... தமிழ் சினிமாவின் அடுத்த பாய்ச்சல்!

வீலிங் செய்து எமனுக்கு காலிங்... டூ வீலரில் இளைஞரின் அட்டகாசம்!

குட் நியூஸ்... இனி புக் செய்த அனைவருக்கும் ரயில் டிக்கெட்; ரயில்வேயின் புதிய திட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in