மிஸ் பண்ணாதீங்க... வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: நாளை சிறப்பு முகாம்!

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்
Updated on
1 min read

மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடத்தப்படவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ள நாளை மற்றும் நாளை மறுநாள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

வாக்காளர் அட்டை
வாக்காளர் அட்டை

வரும் 2024-ம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் முதல் தேதியில் 18 வயது பூர்த்தியாக உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் பெயர் நீக்கமும் செய்து கொள்ளலாம்.

கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த சிறப்பு முகாம் ஒத்திக்கவைக்கப்பட்டது. அதன்படி வாக்காளர் சிறப்பு முகாம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. சென்னையில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம் சிறப்பு முகாம் (கோப்பு படம்)
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம் சிறப்பு முகாம் (கோப்பு படம்)

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள மற்றும் நீக்கம் செய்ய voterhelpline app, www.nvsp.in மற்றும் www.voters.eci.gov.in ஆகிய இணைய சேவைகளின் மூலம் தகுந்த ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

வங்கியின் பாஸ்புக், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்று இந்த சிறப்பு முகாம்களில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று BLACK FRIDAY... களை கட்டும் ஆன்லைன் விற்பனை... கம்மி விலையில் கைநிறைய அள்ளலாம்!

சென்னையில் பரபரப்பு... 27 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் நோய்த்தொற்று!

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரூ.1 கோடி ஹவாலா பணத்துடன் ஆட்டோவில் வந்த கும்பல்! போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்த ஓட்டுநர்!

அவலம்... இறந்தவரின் உடலை 9 கிமீ தூரம் டோலி கட்டி தூக்கிச் சென்ற மக்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in