சென்னையில் அதிர்ச்சி! 27 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் நோய்த்தொற்று! பதறும் பாதிக்கப்பட்டவர்கள்

ரேபிஸ் நாய்
ரேபிஸ் நாய்

சென்னை வண்ணாரப்பேட்டையில் தெருவில் நடந்து சென்ற பெண்கள், சிறுவர்களை விரட்டி, விரட்டி கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாயிடம் கடி வாங்கியவர்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

நாய்
நாய்

சென்னை, ராயபுரம், ஜி.ஏ சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படுவது வழக்கம். இந்த பகுதியில் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாலை நேரத்தில் பள்ளி முடிந்து பெற்றோர்கள் தங்களது குழந்தையை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தெரு நாய் ஒன்று பொதுமக்களை பார்த்து குறைந்து கொண்டிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் அனைவரையும் விரட்டி, விரட்டி கடிக்க ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓட்டம் பிடித்தனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கால் தவறி கீழே விழுந்தனர்.

மேலும் நாய் விரட்டி, விரட்டி கடித்ததில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 27 பேர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நாய் கடி ஊசி செலுத்திக்கொண்டனர்.

இதனிடையே அந்த நாயை அப்பகுதியில் உள்ளவர்கள் கல்லால் தாக்கி அடித்துக் கொன்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் நாயின் உடலை பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். நாயை பரிசோதித்த மருத்துவர்கள் நாய்க்கு ரேபிஸ் தொற்று உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 டோஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in