ரூ.1 கோடி ஹவாலா பணத்துடன் ஆட்டோவில் வந்த கும்பல்! போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்த ஓட்டுநர்!

ஆட்டோ ஓட்டுநர் சுந்தரராஜ்
ஆட்டோ ஓட்டுநர் சுந்தரராஜ்

சென்னையில் ஒரு கோடி ரூபாய் ஹவாலா பணத்துடன் வந்த கும்பலை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருபவர் சுந்தரராஜ். இவரது ஆட்டோவில் நேற்று மூன்று பேர் சென்னைக்கு வந்து இருக்கின்றனர். அப்போது இவர்களது நடவடிக்கையில் ஆட்டோ ஓட்டுநருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் அருகே ஆட்டோ வந்தபோது யானை கவுனி காவல் நிலையம் முன்பு ஆட்டோவை நிறுத்தினார் ஓட்டுநர் சுந்தரராஜ். இதையடுத்து அங்கிருந்த காவலர்களை அழைத்துள்ளார் ஆட்டோ ஓட்டுநர். அப்போது ஆட்டோவில் இருந்த 3 பேரும் தப்பிக்க முயன்றுள்ளனர். அவர்களை காவல்துறையினர் விரட்டிச்சென்று பிடித்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் சுந்தரராஜ்
ஆட்டோ ஓட்டுநர் சுந்தரராஜ்

அப்போது அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது, ஒரு கோடி ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதன் பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆந்திராவைச் சேர்ந்த யாசிர், தாவூத், ஃபைசுல்லா என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஹவாலா பண் 1 கோடி ரூபாயை வருமான வரித்துறையினரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் ஹவாலா கும்பலை சாதுரியமாக பிடித்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் பாராட்டி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in