இன்று கருப்பு வெள்ளி... களை கட்டும் ஆன்லைன் விற்பனை... கம்மி விலையில் கைநிறைய அள்ளலாம்!

இன்று கருப்பு வெள்ளி...  களை கட்டும் ஆன்லைன் விற்பனை... கம்மி விலையில் கைநிறைய அள்ளலாம்!

ப்ளாக் ஃப்ரைடே எனப்படும் கறுப்பு வெள்ளி தினமான இன்று  அமேசான், க்ரோமா உள்ளிட்ட ஆன்லைன்  விற்பனை நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வழங்குவதால் தேவையான பொருட்களை இன்று வாங்குவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில்  இது கடும் குளிர் காலமாகும். அங்கு நவம்பர் மாத இறுதியில் கறுப்பு வெள்ளி தினம் கொண்டாடப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறைகளும் தொடர்ந்து வர இருக்கிறது. எனவே இந்த கறுப்பு வெள்ளியன்று ஏராளமான பிராண்ட் பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். 

மேலை நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த கொண்டாட்டமானது சமீப காலங்களாக இந்தியாவிலும் களைகட்ட தொடங்கியுள்ளது. அமேசான், அஜியோ, க்ரோமா, நைக்கா உள்ளிட்டவை இந்த கறுப்பு வெள்ளிக்கான அதிரடி சலுகை விற்பனையை அறிவித்துள்ளன. அதனால் இந்த கருப்பு வெள்ளி  ஆன்லைன், ஆஃப்லைன் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டமான ஒரு தினமாகும்.

இந்த நாளுக்காக  இந்தியாவில் அஜியோ (Ajio) தனது அதிரடி சலுகைகளை அறிவித்திருக்கிறது. ஆடைகள், செருப்பு, ஷூ, கூலிங் கிளாஸ், அணிகலன்கள் போன்றவற்றை 50-90 சதவிகிதம் வரை தள்ளுபடி விற்பனையில் விற்க இருக்கிறது. இது தவிர மைக்கேல் கோர்ஸ், கோச், கேட் ஸ்பேட் மற்றும் ஸ்டெல்லா மெக்கார்ட்னி போன்ற சர்வதேச பிராண்டுகளுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி கொடுப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த விற்பனை இன்று (நவ.24) முதல் வரும் 27ம் தேதி வரை நடைபெறும்.

ஜப்பானின் பிரபல ஆடை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான Uniqlo-வும் தனது சலுகை விலை விற்பனையை தொடங்கியுள்ளது. இன்று முதல் வரும் 30ம் தேதி வரை இந்த சலுகை விற்பனை நீடிக்கும்.

மேலும் Zara நிறுவனத்தை பொறுத்த அளவில், குறிப்பிடத்தக்க பொருட்களுக்கு மட்டும் 40 சதவிகிதம் வரை தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. நேற்று இரவு 9 மணிக்கு Zara செயலியிலும், 10 மணிக்கு அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் சலுகை விற்பனை தொடங்கப் பட்டுள்ளது. இன்று காலை முதல்  Zara கடைகளில் சலுகை விற்பனை தொடங்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஆன்லைன் அழகுசாதன நிறுவனமான Nykaa இந்த கறுப்பு வெள்ளியை, பிங்க் வெள்ளி என கூறி சலுகை விற்பனைகளை தொடங்கியுள்ளது. அதாவது சுமார் 2,100க்கும் மேற்பட்ட பிராண்ட் பொருட்களை 50 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் கொடுக்கிறது. இந்த விற்பனை நேற்று மாலை 4 மணிக்கே தொடங்கிவிட்டது.

அதேபோல க்ரோமா (Croma) OnePlus, Vivo மற்றும் Realme செல்போன்களை அட்டகாசமான சலுகை விலையில் விற்பனை செய்வதாக அறிவித்திருக்கிறது.  26ம் தேதி வரை இந்த விற்பனை நீடிக்கும்.

இவை எல்லாவற்றையும் விட  மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக டேப்லெட்டுகள், ஸ்பீக்கர்கள், வாட்ச்கள், ஃபோன்கள், மடிக்கணினிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பொம்மைகள் என ஆயிரக்கணக்கான பொருட்களை சலுகை விலையில் விற்பதாக அமேசான் அறிவித்திருக்கிறது. எனவே பொருட்களை வாங்க திட்டமிட்டு இருப்பவர்கள் இந்த கருப்பு வெள்ளி தினத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in