கொங்கு மண்டலம் முழுவதும் திமுக வேட்பாளர்கள்... அதிமுகவுக்கு செக் வைக்கும் மாஸ்டர் பிளான்!

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலம் முழுவதும் திமுக நேரடியாக களமிறங்க முடிவு செய்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சி-10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-2, மதிமுக-1, விடுதலை சிறுத்தைகள்-2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-1, மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1, தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மேலும் மக்கள் நீதி மையம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்து களமிறங்குகின்றன. அந்த வகையில் இன்றுடன் அனைத்து கட்சிகளுக்குமான தொகுதி பங்கீடுகள் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் நிறைவு பெற்றுள்ளது.

தமிழ்நாடு கொங்கு மண்டலம்
தமிழ்நாடு கொங்கு மண்டலம்

திமுகவை பொருத்தவரை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்குகிறது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி (தனி), பொள்ளாச்சி, கோவை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி (தனி), ஸ்ரீபெரும்புதூர், பெரம்பலூர், தேனி, ஈரோடு, ஆரணி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என முடிவாகியுள்ளது. கடந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பல தொகுதிகளிலும் இந்த முறை திமுக நேரடியாக களமிறங்குகிறது. அந்த வகையில் கோவை, தேனி, ஈரோடு, ஆரணி உள்ளிட்ட தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்க முடிவு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்

கடந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த மேற்கு மண்டலத்தில் உள்ள தொகுதிகளில் இந்த முறை திமுக நேரடியாக களமிறங்குகிறது. கோவை தொகுதி கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த முறை திமுக போட்டியிட உள்ளது. இதே போல் ஈரோடு தொகுதி கடந்த முறை மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தமுறை திமுக நேரடியாக களமிறங்குகிறது. ஆரணி, தேனி உள்ளிட்ட தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை திமுக நேரடியாக களமிறங்குகிறது. கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக வலுவாக உள்ளது.

அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி
அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. இதேபோல் நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிமுக பெரும்பான்மையான சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதன் காரணமாக கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என அதிமுக தலைவர்கள் தொடர்ந்து கருத்துகளை முன் வைத்து வந்தனர். மறுபக்கம் பாஜகவும் இப்பகுதியில் கணிசமான செல்வாக்குடன் உள்ளது. இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போலவே, இந்த முறையும் தமிழ்நாடு முழுவதும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற திமுக கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது.

குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பதற்காக திமுக இந்த முறை தீவிரமான முன்னெடுப்புகளை முன்வைத்து வருகிறது. அந்த வகையில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் நேரடியாக களமிறங்க திமுக முடிவு செய்துள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக கொங்கு மண்டலத்தில் பதிவு செய்யும் வெற்றியை, வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலிலும் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் திமுக இந்த முடிவை எடுத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

“இரட்டை இலை எனக்கே கிடைக்கணும் முருகா'!... திருச்செந்தூரில் ஓபிஎஸ் மனமுருகி பிரார்த்தனை!

'குக் வித் கோமாளி' பாலா செய்த தரமான சம்பவம்... வைரலாகும் வீடியோ!

1 முதல் 9-ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு எப்போது? பள்ளிக் கல்வித்துறை முடிவு!

விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்... காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு!

நீரை சேமிக்கும் புதுமையான டெக்னிக்... வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in