இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஸ்டாலின்; பரபரப்பில் அமைச்சர்கள்... திமுக மாவட்டச் செயலாளர்கள்!

இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ஸ்டாலின்; பரபரப்பில் அமைச்சர்கள்... திமுக மாவட்டச் செயலாளர்கள்!

இன்று அக்டோபர் 1ம் தேதி காலை 10.30 மணிக்கு காணொளிக் காட்சி வாயிலாக, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைப்பெற உள்ளது.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... (கோப்பு படம்)
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... (கோப்பு படம்)

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் தொடர்பான பணிகளை தொடங்கியுள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையில் உருவாகியுள்ள கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் கூட்டணியை தொடர்ந்து வருகின்றன. இதனிடையே அதிமுக, பாஜக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படுமா என அரசியல் பார்வையாளர்கள் இடையே விவாதங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனிடையே திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை ஏற்கெனவே தொடங்கி விட்டது. இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் இன்று காலை காலை 10.30 மணிக்கு காணொளிக் காட்சி வாயிலாக நடைப்பெற உள்ளது.

இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அனைத்து சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Summary

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இன்றைய கூட்டத்தில், விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது, மக்களிடம் அரசு திட்டங்களைக் கொண்டு செல்வது, திமுக அரசின் சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ள ஸ்டாலின், இந்த கூட்டத்தில் கட்சியினருக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in