
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலத்தில் கடந்த மார்ச் 7-ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக் குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக புகாரளிக்கப்பட்டது.
இதன் பேரில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது எம்.பி சி.வி.சண்முகம் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் வாசிக்கலாமே...
HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!
தீபாவளி கொண்டாட்டம்... 16,895 பேருந்துகள் இயக்கம்... எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? முழு விபரம்!
அதிர்ச்சி... பெண் அதிகாரி கழுத்தறுத்து கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்
பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! உயிர் தப்பிய குடும்பம்