HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!

HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் கனவுக்கன்னியாக கோலோச்சியவர் நடிகை அம்பிகா. நடிகர்கள் சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ள நடிகை அம்பிகாவின் 61வது பிறந்தநாள் இன்று. அவர் குறித்தான சில சுவாரஸ்ய தகவல்களைப் பார்க்கலாம் வாங்க.

* கேரளாவில் கிராமத்து குடும்பத்தில் பிறந்த நடிகை அம்பிகா, வீட்டின் மூத்த பெண் குழந்தை. இவருக்கு இரண்டு தங்கைகள், இரண்டு தம்பிகள் உண்டு. படிப்பில் பெரிய நாட்டமில்லை என்றாலும் நடனம், நடிப்பில் சிறுவயதில் இருந்தே ஆர்வம் காட்டினார்.

நடிகை அம்பிகா...
நடிகை அம்பிகா...

* சினிமாவில் தனது திறமையான நடிப்பாலும், கவர்ச்சியாலும் கொடிகட்டிப் பறந்த காலத்தில் பல கிசுகிசுக்களை எதிர்கொண்டார் நடிகை அம்பிகா. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாது, கடந்த 1988ம் ஆண்டு பிரேம்குமார் மேனன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இருமகன்கள் பிறந்த நிலையில், திருமணமான எட்டு ஆண்டுகளிலேயே இவர்களது திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது.

பின்பு, 2002ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் அம்பிகா. அதுவும் அந்த திருமண வாழ்க்கையும் அதிக ஆண்டுகள் நீடிக்கவில்லை.

நடிகை அம்பிகா...
நடிகை அம்பிகா...

*இவரது தங்கை ராதாவும் திரையில் கொடி கட்டிப் பறந்த முன்னணி நடிகை தான். இருவரும் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘வெள்ளை ரோஜா’, ‘அம்பிகை நேரில் வந்தால்’, ‘இதயகோயில்’, ‘மனக்கணக்கு’, ‘காதல் பரிசு’, ‘தாம்பத்தியம்’, ‘அண்ணா நகர் முதல் தெரு’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, சிவாஜியுடன் இந்த நட்சத்திர சகோதரிகள் இணைந்து நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார்கள்.

ராதா, அம்பிகா...
ராதா, அம்பிகா...

*அம்பிகாவும் ராதாவும் திரைத்துறையில் நடிப்புத் துறையில் கலக்க, இவர்களது தம்பிகள் அர்ஜூன், சுரேஷ் இருவருமே ஒருசில படங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களது சகோதரி மல்லிகா மட்டும் தான் திரையில் வரவில்லை என்றாலும், அவரும் தொலைக்காட்சி தயாரிப்பில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பிகா, ராதா, மல்லிகா...
அம்பிகா, ராதா, மல்லிகா...

* நடிகை ராதா, சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்த ‘முதல் மரியாதை’ திரைப்படம் வெற்றிப் பெற்றதும், இதில் ராதா கதாபாத்திரத்தின் மேல் அம்பிகாவுக்கு அதிக பொறாமை ஏற்பட்டதாம். அதேபோல, ராதாவின் இன்னொரு படமான ‘காதல் ஓவியம்’ படம் மீதும் அவருக்கு பொறாமை உண்டு. ராதாவுக்கு அம்பிகாவின் ’அந்த ஏழு நாட்கள்’ படத்தை பார்த்துவிட்டு ’நான் நடித்திருக்கலாம்’ என அம்பிகாவிடம் கூறி இருக்கிறார்.

’முதல் மரியாதை’ படத்தில்...
’முதல் மரியாதை’ படத்தில்...

* சினிமா மட்டுமல்லாது அரசியலிலும் அம்பிகாவுக்கு ஈடுபாடு உண்டு. அவரின் அம்மா, கேரள காங்கிரஸில் இருந்தார். இருந்தாலும் சினிமா, அரசியல் குறித்து வீட்டில் பேச்சே இருக்காது. அம்பிகா, ராதா என இருவருமே நடிகை ஜெயலலிதா மீதுள்ள அன்பு காரணமாக அவர் கேட்டுக் கொண்டதற்காக ஆண்டிபட்டி தொகுதியில் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.

ஜெயலலிதாவுடன் அம்பிகா, ராதா...
ஜெயலலிதாவுடன் அம்பிகா, ராதா...

தனக்குப் பிடித்த பெண் அரசியல் தலைவர்களாக ஜெயலலிதா, இந்திராகாந்தியை குறிப்பிடுவார். தற்போது, சின்னத்திரையில் சீரியல்கள், பெரிய திரையில் அவ்வப்போது படங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என பிஸியாக வலம் வரும் அம்பிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in