திருச்சியில் பயங்கரம்... பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! உயிர் தப்பிய குடும்பம்

வெடிகுண்டு வீச்சு
வெடிகுண்டு வீச்சு

திருச்சியில் பிரபல ரவுடி வீட்டின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த வெடிகுண்டு வீச்சில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

திருச்சி மேலகொண்டையம் பகுதி சேர்ந்தவர் மணிகண்டன். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கடந்த 2021ம் ஆண்டு ஆட்டோ டிரைவர் முருகனை கொலை செய்த வழக்கு இருக்கிறது. இந்த வழக்கை ஸ்ரீரங்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கில் மணிகண்டனை பழிக்குப்பழி வாங்குவதற்காக முருகனின் கூட்டாளிகள் முடிவு செய்தனர். பலமுறை மணிகண்டன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறார். இதில் அவர் தப்பி வந்துள்ளார்.

இதனிடையே, ரவுடி மணிகண்டனின் தாயார் வீடு திருவானைகாவல் பகுதியில் இருக்கிறது. இவரது வீட்டிற்கு முன்னால் இறைச்சிக்கடையும் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் ரவுடி மணிகண்டனின் தாயார் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி வெடிக்கச் செய்தனர். இதில் அங்கு இருந்த பொருட்கள் வெடித்து சிதறியது. அதே நேரத்தில் வீட்டிற்குள் இறந்தவர்கள் மீது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்தது காவல்துறையின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது மணிகண்டனின் தாயார் வீட்டின் முன்பு அடையாளம் தெரியாத மூன்று பேர் நாட்டு வெடிகண்டை வீசிச்சென்றது தெரியவந்தது. பழிக்குப்பழியாக இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்ததா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in