காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் சுருண்டுவிடும்: இமாச்சலில் அமித் ஷா பிரச்சாரம்

ஹிமாச்சல பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம்
ஹிமாச்சல பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம்

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இமாச்சலப் பிரதேச மாநிலம், ஹமிர்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூரை ஆதரித்து உனா மாவட்டம் அம்ப்-ல் அமித் ஷா இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, "நடப்பு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளுடனேயே கட்டுப்படுத்தப்படும். ஹமிர்பூர் தொகுதிக்கு பாஜக மிகப் பெரிய தலைவரை அனுப்பியுள்ளது. அனுராக் தாக்கூர் போன்ற ஒரு எம்பி கிடைத்ததற்கு நீங்கள் (மக்கள்) அதிர்ஷ்டசாலிகள். எனவே புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள்.

பிரதமர் மோடி உங்களுக்கு ரெடிமேட் மந்திரியை கொடுத்திருக்கிறார். எனக்கு அனுராக் ‘பாய்’-ஐ (சகோதரர்) பல வருடங்களாகத் தெரியும்.

இப்போது அவர் மோடியின் அமைச்சரவையில் அவருக்கு துணையாகப் பணியாற்றி வருகிறார். 5 கட்ட தேர்தல்களில் பிரதமர் மோடி 310 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துவிட்டார். எஞ்சிய இரண்டு கட்ட தேர்தல் மூலம் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராவார்” இவ்வாறு அமித் ஷா பேசினார்.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

கடந்த 2008 மே மாதம் நடந்த மக்களவை இடைத்தேர்தலில் அப்போது 34 வயதில் தனது முதல் தேர்தல் வெற்றியை அனுராக் தாக்கூர் பெற்றார்.

ஹமிர்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி கடைசியாக கடந்த 1996ல் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்து வந்த தேர்தலில் இருந்து இந்த தொகுதி பாஜகவின் கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் அனுராக் தாகூர் தொடர்ச்சியாக 4 முறை வெற்றி பெற்றுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது.. வரலாறு படைத்தார் இந்திய நடிகை!

நிறைமாத நிலவே வா... வா... நடிகை அமலபால் லேட்டஸ்ட் போட்டோஷூட்

ரூ. 640 கோடியில் மருமகளுக்குப் பரிசு... அசத்திய அம்பானி மனைவி!

சொகுசு ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் பில் பாக்கி... 18 சதவீத வட்டியுடன் செலுத்த எச்சரிக்கை!

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனுடன் மது விருந்து நடத்திய குற்றவாளி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in