
பட்டியலின மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் கட்சி பயன்படுத்துவதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வனப்பர்த்தி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, ”விவசாயிகள் நலனில் பாஜகவை போலவே காங்கிரஸ் கட்சிக்கும் அக்கறை இல்லை. இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின மக்களின் நலன்களுக்காக மத்திய பாஜக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அவர்களுக்காக குரல் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி சொல்லிக் கொள்கிறது.
ஆனால், சுதந்திரத்திற்கு பிறகு மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. இருந்தபோதிலும் பட்டியலின மக்களின் நலனுக்காகவோ, இஸ்லாமிய மக்களின் நலனுக்காகவோ எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. பட்டியலின மற்றும் இஸ்லாமிய மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வருகிறது ” என்று குற்றம் சாட்டினார்.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில், கல்வீச்சு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்... ரூ.20 கோடி கேட்டு பரபரப்பு!
பிக் பாஸ் வீட்ல இந்த கூத்தெல்லாம் நடக்குது... உண்மையை போட்டுடைத்த முன்னாள் போட்டியாளர்!