காங்கிரஸ் கட்சியிடம் மிகப்பெரும் ‘வாஷிங் மெஷின்’ இருக்கிறது... முன்னாள் காங்கிரஸ் தலைவரின் கிண்டல்

ஹிமந்த பிஸ்வா சர்மா
ஹிமந்த பிஸ்வா சர்மா

'காங்கிரஸிடம் பெரிய ஹை வோல்டேஜ் வாஷிங் மெஷின் இருக்கிறது’ என முன்னாள் காங்கிரஸ்காரரும் தற்போதைய பாஜக முதல்வருமான ஹிமந்த பிஸ்வா சர்மா சாடியுள்ளார்.

வாஷிங் மெஷின் என்பதை முன்வைத்து காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி - அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இடையிலான மோதல் வலுத்துள்ளது. பாஜகவின் வாஷிங் மெஷினில் சலவையாக்கப்பட்ட முதல் நபர் ஹிமந்தா சர்மா என முதல் நாள் பிரியங்கா காந்தி சாடியிருந்தார். அதற்கு சர்மா அடுத்த நாளே சர்மா பலமான பதிலடி தந்தார்.

ஹிமந்த பிஸ்வா சர்மா
ஹிமந்த பிஸ்வா சர்மா

"காங்கிரஸ் கட்சியிடம் பெரிய வாஷிங் மெஷின் உள்ளது. அரவிந்த் கேஜ்ரிவாலை எந்த வாஷிங் மெஷின் மூலம் சலவை செய்தார்கள் என்று பிரியங்கா காந்தியிடம் கேளுங்கள். அரவிந்த் கேஜ்ரிவால் மதுபானம் மூலம் பணத்தை கொள்ளையடித்தார் என்று முதலில் காங்கிரஸார் குற்றம்சாட்டினார்கள். அவர்களே பின்னர் அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு நல்ல மனிதர் என்றார்கள். அப்படி அவர்களிடம் எந்த ஹை வோல்டேஜ் வாஷிங் மிஷின் இருக்கிறது?” என்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சர்மா கேட்டிருந்தார்.

நேற்றைய தினம் அசாமின் துப்ரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, ‘பிஜேபி ஒரு சலவை இயந்திரத்தை உருவாக்கியதாகவும், அதில் சர்மாவுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டதாகவும்’ தாக்கியிருந்தார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

"உங்கள் முதல்வர் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தன. அவர் பாஜகவுக்கு மாறியவுடன், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கழுவ, ஊழல்வாதிகளுக்கான ஒரு சலவை இயந்திரத்தை பாஜக உருவாக்கியது. உங்கள் முதல்வர் இந்த விஷயத்தில் முதல் நபராக இடம்பெற்றிருந்தார்" என்று பிரியங்கா காந்தி சீண்டி இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் வாஷிங் மெஷின் குறித்தும், அதில் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஊழல் அழுக்குகள் களையப்பட்டது குறித்தும் சர்மா பதிலுக்கு கிண்டல் செய்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...
உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?

நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!

காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in