நீட் விலக்கு நம் இலக்கு... க்யூஆர் கோடு ஸ்கேன் செய்யுங்கள்! கோவையில் பரபரப்பு போஸ்டர்!

நீட் எதிர்ப்பு போஸ்டர்
நீட் எதிர்ப்பு போஸ்டர்
Updated on
1 min read

அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதற்காக தமிழக அரசு சார்பில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து என்ற இலக்குடன் தொடங்கப்பட்டுள்ள அந்த கையெழுத்து இயக்கத்தை தி.மு.க தலைவர், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவை மாநகரின் காந்திபுரம், டவுன்ஹால், ரயில்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 'நீட் விலக்கு நம் இலக்கு' என்றும் 'பேன் நீட்' என்றும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் அந்த சுவரொட்டியில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் உங்கள் ஆதரவை பதிவு செய்ய இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யவும் எனவும் குறிப்பிட்டு அருகில் க்யூஆர் கோடு அச்சிடப்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியால் கோவை மாநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in