பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது... புள்ளி விவரங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாட்டில் நிலவும் வேலையின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரித்துள்ளதால், பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் துவங்கிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் லோக் பால் என்ற நிறுவனம் மக்களவைத் தேர்தலில் முன்வைக்கப்படும் முக்கிய பிரச்சினைகள் குறித்து நாடு முழுவதும் கருத்துக்கணிப்பை நடத்தியிருந்தது. அந்த முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், பெரும்பாலானோரும், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்னை ஆகியவை முக்கிய பிரச்சினைகள் எனத் தெரிவித்திருந்தனர். இந்த கருத்துக்கணிப்பின் அடிப்படையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து பாஜக மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பாஜக ஆட்சியின் கவுண்டவுன் தொடங்கி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ’புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில், 27 சதவீதம் பேர் #Unemployment-தான் முக்கியப் பிரச்சினை என்றும், 23 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு என்றும், 55 சதவீதம் பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76 சதவீதம் பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.’

வேலைவாய்ப்பின்மை
வேலைவாய்ப்பின்மை

‘இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது!’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...   

தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்வது ஏன்?... மத்திய பாஜக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி!

அமைச்சர் நேரு மகனுக்கு நெருக்கடி தரும் பாரிவேந்தர்... பெரம்பலூரில் சூரியனை நெருங்கும் தாமரை!

நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவுக்கு சிக்கலா?... தேர்தல் அதிகாரி புகரால் பெரும் பரபரப்பு!

பாஜக வேட்பாளரால் சர்ச்சை... திருவள்ளுவர் சிலைக்கு திருநீறு, குங்குமம் பூசியதால் பரபரப்பு!

அசாமில் அடித்து முன்னேறும் காங்கிரஸ்... கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு பின்னடைவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in