பிரதமர் மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது... முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

தாய்மொழியாக தமிழ் வாய்க்கவில்லை என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது எனவும், தமிழர்கள் எப்படி நம்புவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று கலந்துரையாடினார். அப்போது புதிய ஏ.ஐ தொழில்நுட்பத்தில் அவர் இந்தியில் உரையாற்ற, அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தாய்மொழியாக தமிழ் வாய்க்கவில்லை என வருந்துவதாக தெரிவித்திருந்தார். மேலும் தமிழ்நாடு அரசு குறித்தும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை அவர் முன் வைத்திருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாய்மொழியாக தமிழ் வாய்க்கவில்லை என பிரதமர் மோடி வருந்துவதாக நேற்று மாலை செய்தி வெளியானதாகவும், இன்று காலை செய்தியில் அழகிய தமிழ்ச்சொல் வானொலி இருக்க ஆகாசவாணி என்பதை பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது எனவும், தமிழர்கள் எப்படி நம்புவார்கள் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றிருந்த பொதுக்கூட்டம் ஒன்று கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டில் இயக்கப்படும் விமானங்களில் தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியிடப்படும் என பேசியிருந்தார். இந்த காணொலியையும் பகிர்ந்து, அந்த உறுதிமொழி என்ன ஆனது என முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ’நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி! நேற்று காலைச் செய்தி: அழகிய தமிழ்ச்சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும். மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?’

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

‘ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்? கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன? பிரதமர் மோடி அவர்களே... கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு.

விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை. "எங்கும் இந்தி! எதிலும் இந்தி!" என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை! தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!

நடுக்கடலில் பரபரப்பு... கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை!

கோயில் திருவிழாவில் அதிர்ச்சி... தேர்ச்சக்கரத்தில் சிக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி!

46 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள்... வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in