பாஜக -அதிமுக கள்ளக்கூட்டணி ... வீடு வீடாகச் சென்று அம்பலப்படுத்துங்கள் ... முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
முதல்வர் ஸ்டாலின் கடிதம்

``பாஜக - அதிமுகவின் கள்ளக்கூட்டணியை வீடு வீடாகச் சென்று அம்பலப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்'' என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த அதிமுக அண்மையில் அந்த கூட்டணியை முறித்துக் கொண்டது. இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  நன்றி மீண்டும் வராதீர்கள் என அதிமுக தொண்டர்கள் பாஜகவினருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டி திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம்  எழுதியுள்ளார். அந்த  கடிதத்தில், 'பாஜகவுடன் கூட்டு சேர்ந்து மக்களுக்கு துரோகம் செய்த அதிமுக, கூட்டணி முறிந்ததாக வேடம் போடுகிறது. பாஜக -  அதிமுகவின் கள்ளக் கூட்டணியை வீடு வீடாகச் சென்று அம்பலப்படுத்தும் பணியில் திமுகவினர் ஈடுபட வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நாம் உழைப்பது இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல; நாட்டு மக்களின் விடுதலைக்காகவும்தான். தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கடமையையும் திமுக தன் தோளில் சுமந்துள்ளது. வெற்றியை உறுதி செய்யும் உழைப்பை நாம் அனைவரும் வழங்க வேண்டும். எதிர்வரும் தேர்தலில் இந்தியா நம் வசம்தான்' என  கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஊழல் பணம் ரூ.1 லட்சம் கோடியை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம்... ராகுல் காந்தி வாக்குறுதி!

பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

விபத்துக்குள்ளான கார்... காப்பாற்றத் துடிக்காமல் மதுப்புட்டிகளை அள்ளிச் சென்ற மக்கள்!

வயிற்று வலி மருந்து என ஹேர் டை குடித்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in