திருநீறு பூசி ஆசி வழங்கிய முதல்வர்... திக்குமுக்காடிப் போன புஸ்ஸி ஆனந்த்!

புஸ்ஸி ஆனந்த் வீட்டில் ரங்கசாமி
புஸ்ஸி ஆனந்த் வீட்டில் ரங்கசாமி

உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திருநீறு பூசி ஆசி வழங்கியுள்ளார்.

விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளரான  புஸ்ஸி ஆனந்த் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதற்காக இரவு பகல் பாராமல் உழைத்ததால் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்த நடிகர் விஜய் பதறிப்போய் மருத்துவமனைக்கே சென்று உடல் நலம் விசாரித்தார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து புதுச்சேரியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய புஸ்ஸி ஆனந்தை, புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி நேற்று வீடு தேடிச் சென்று நலம் விசாரித்தார். அப்போது புஸ்ஸி ஆனந்த் பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதம் எடுத்துச் சென்றிருந்த ரெங்கசாமி, அதனை புஸ்ஸி ஆனந்திற்கும் அவரது மனைவிக்கும் கொடுத்து ஆசிர்வாதம் செய்தார்.

ரங்கசாமி,  விஜய் உடன் புஸ்ஸி ஆனந்த்
ரங்கசாமி, விஜய் உடன் புஸ்ஸி ஆனந்த்

புஸ்ஸி ஆனந்த் நெற்றியில் திருநீறு பூசி ’உனக்கு ஒன்றும் ஆகாது’ என வாழ்த்தினார். இதனால் நெகிழ்ந்து போன புஸ்ஸி ஆனந்த், புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி காலில் குடும்பத்துடன் விழுந்து வணங்கி மரியாதை செலுத்தினார். ரங்கசாமிக்கு மிகவும் நெருக்கமானவரான புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதும், நடிகர் விஜய் - ரங்கசாமி சந்திப்பு நிகழ காரணமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!

கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!

பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?

ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in