கிருஷ்ணகிரியில் மறு வாக்கு எண்ணிக்கை... 2021ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுகவின் அசோக்குமார், திமுகவின் செங்குட்டுவன்
அதிமுகவின் அசோக்குமார், திமுகவின் செங்குட்டுவன்

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றியை எதிர்த்த வழக்கில், செல்லாது என அறிவிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021ம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் செங்குட்டுவன் மற்றும் அதிமுக சார்பில் அசோக்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 704 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அசோக்குமார் வெற்றி பெற, 605 தபால் வாக்குகளை செல்லாது என தேர்தல் அதிகாரி நிராகரித்ததாக கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இதற்கு திமுக வேட்பாளர் செங்குட்டுவன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து தேர்தல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், உரிய காரணம் இன்றி அதிமுக வேட்பாளர் வெற்றி பெறச் செய்ய, தபால் வாக்குகளை செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். நிராகரிப்பதற்கு முன், வேட்பாளர்களிடம் காரணங்களை தெரிவிக்கவில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. திட்டமிட்டே அதிமுக வேட்பாளர் வெற்றி பெற தேர்தல் அதிகாரி செயல்பட்டுள்ளதாக அந்த மனுவில் செங்குட்டுவன் குற்றம் சாட்டியிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தனக்கும், அதிமுக வேட்பாளருக்குமான வாக்கு வித்தியாசம் 794 தான் எனவும், அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளையும் மீண்டும் மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்ற பதிவாளர் தலைமையில் இரண்டு தேர்தல் அதிகாரிகள் மற்றும் அதிமுக-திமுக வேட்பாளர் முன்னிலையில் இந்த தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் மறுவாக்கு எண்ணிக்கையை ஒரு மாதத்தில் முடித்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து வழக்கை முடித்து வைத்து நீதிபதி ஆஷா உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in