பாஜக முதலிடம்.... 2022-23-ம் ஆண்டில் வருமானம் ரூ.2,361 கோடி!

அமித் ஷா, ஜே.பி.நட்டா
அமித் ஷா, ஜே.பி.நட்டா

கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.2,361 கோடி வருமானத்துடன் தேசிய கட்சிகளில் பாஜக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இந்தியாவில் உள்ள ஆறு தேசிய கட்சிகள் 2022-2023-ம் ஆண்டிற்கான வரவு மற்றும் செலவு குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தன. அதன் தகவல்களைச் சேகரித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த சங்கத்தின் அறிக்கையின்படி 2022-2023-ம் ஆண்டு தேசிய கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.3,077 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக கொடி
பாஜக கொடி

இதில் பாஜக 76.73 சதவீத பங்கு வருமானத்தைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. 2022-23-ம் ஆண்டில் பாஜகவின் வருமானம் ரூ.2,361 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி ரூ.452.375 கோடி(14.70 சதவீதம்) வருமானத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.

இதைத் தவிர பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தேசிய மக்கள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 4 தேசிய கட்சிகள் தங்கள் வருமான விவரத்தை தாக்கல் செய்துள்ளன. இதில் ஆம் ஆத்மியின் வருமானம் ரூ.85.17 கோடி, தேசிய மக்கள் கட்சியின் வருமானம் ரூ.7.56 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருமானம் ரூ.141.66 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-22 மற்றும் 2022-23-ம் நிதி ஆண்டுக்கு இடையில் பாஜகவின் வருமானம் 23.15 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்னதாக 2021-22-ம் நிதி ஆண்டில் பாஜகவின் வருமானம் ரூ.1917.12 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


இந்திய நிறுவனங்கள் 10% சம்பள உயர்வை அறிவிக்கும்... குஷிப்படுத்திய கருத்து கணிப்பு முடிவுகள்!

படப்பிடிப்பில் நடிகையை அடித்த இயக்குநர் பாலா...பரபரப்பு வீடியோ!

தமன்னாவுக்கே டஃப் கொடுக்கும் யானை... காவாலா பாட்டுக்கு கலக்கல் டான்ஸ்!

லீக்கானது ’வேட்டையன்’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ... போலீஸ் சீருடையில் மாஸாக வரும் ரஜினி!

அடடே மனோகர் திடீர் மறைவு... ஆழ்ந்த சோகத்தில் ரசிகர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in