திமுக அதிமுகவை சீண்டும் பாஜக... கருணாநிதி, ஜெயலலிதா போல் ’ஜெயில் ரிட்டர்ன் கிளப்’ என கேஜ்ரிவால் மீது விமர்சனம்!

சுதான்ஷு திரிவேதி
சுதான்ஷு திரிவேதி

கருணாநிதி, ஜெயலலிதா, லாலு பிரசாத் யாதவ், சிபு சோரனை போல, ’ஜெயில் ரிட்டன் கிளப்’பில் அர்விந்த் கேஜ்ரிவாலும் இணைந்துள்ளதாக பாஜக செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி விமர்சித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு, டெல்லி மாநில மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. இதையடுத்து அவர் இன்று முதல் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று காலை டெல்லியில் உள்ள அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், இன்று மாலை தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆம் ஆத்மி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனிடையே அர்விந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அர்விந்த் கேஜ்ரிவால் சிறையிலிருந்து இடைக்கால ஜாமீனில் வெளியே வந்திருப்பதை கொண்டாடிக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா, கருணாநிதி, லாலு பிரசாத் யாதவ், சிபு சோரன் ஆகியோரைப் போல, ’ஜெயில் ரிட்டன் கிளப்’பில் ஒரு பகுதியாக அவர் இணைந்துள்ளார். அவர் இடைக்கால ஜாமீனில் தான் வெளியே வந்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் அவரை நிரபராதி என விடுவிக்கவில்லை” என்றார்.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

மேலும், ”முன்பு ஷீலா தீக்‌ஷித்தையும், சோனியா காந்தியையும் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த கேஜ்ரிவால், இப்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இதே போலத்தான் இந்தியா கூட்டணியில் பல்வேறு கட்சிகளும் இணைந்து இருக்கின்றன. காங்கிரஸுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்து வந்தவர்கள், இன்று பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் ஒன்றாக இணைந்துள்ளனர். இவர்கள் எல்லோருக்குமே மோடியை எதிர்க்க வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கம். இதுவே அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது.” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த அதிர்ச்சி...  சிவகாசியில் மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

கனமழை: கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் 50 பேர் பலி!

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி... அள்ளி வழங்கும் அமெரிக்கா!

மனைவி நடத்தையில் சந்தேகம்... 2 குழந்தைகளைக் கொன்று விட்டு கணவனும் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in