குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதற்காக தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடுத்திருந்த பத்திரிகை விளம்பரத்தில் சீனக்கொடி இடம்பெற்றதற்கு பாஜக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று 17 ஆயிரம் கோடிக்கான பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இதில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவுக்காக தமிழக அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சார்பில் நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.
அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்துடன், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
அந்த விளம்பரத்தில் பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் படங்களுக்கு பின்னணியில் உள்ள ராக்கெட்டில் சீனக் கொடி இடபெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
'முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அமைச்சர் அளித்த இந்த விளம்பரம், சீனா மீதான திமுகவின் அர்பணிப்பையும், நமது நாட்டின் இறையாண்மையை அவர்கள் முற்றிலும் புறக்கணிப் பதையும் வெளிப்படுத்துகிறது' என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் அண்ணாமலை.
இந்த விவகாரத்தை உடனடியாக பிரதமர் மோடியின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கிறார் அண்ணாமலை இதையடுத்து நெல்லையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், “திமுக விளம்பரத்தில் சீனக் கொடியும், ராக்கெட்டும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் மீது திமுகவுக்கு உள்ள பற்று என்ன என்பதை இது காட்டுகிறது” என்று விமர்சனம் செய்தார்.
இதையும் வாசிக்கலாமே...
இந்திய நிறுவனங்கள் 10% சம்பள உயர்வை அறிவிக்கும்... குஷிப்படுத்திய கருத்து கணிப்பு முடிவுகள்!
படப்பிடிப்பில் நடிகையை அடித்த இயக்குநர் பாலா...பரபரப்பு வீடியோ!
தமன்னாவுக்கே டஃப் கொடுக்கும் யானை... காவாலா பாட்டுக்கு கலக்கல் டான்ஸ்!
லீக்கானது ’வேட்டையன்’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ... போலீஸ் சீருடையில் மாஸாக வரும் ரஜினி!