அதிர்ச்சி... ஜே.பி.நட்டாவின் மனைவி கார் திருட்டு... பாஜக தேசிய தலைவருக்கே இந்த கதியா?!

மனைவி மல்லிகாவுடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
மனைவி மல்லிகாவுடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மனைவியின் கார், திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மனைவி மல்லிகா நட்டா. இவரது பெயரில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த மார்ச் 19ம் தேதி இந்த காரை, ஓட்டுநர் ஜோகிந்தர் சிங் சர்வீஸ் விடுவதற்காக எடுத்துச் சென்றுள்ளார். தனது வீட்டுக்கு சென்று உணவருந்தி விட்டு, பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது அந்த கார் மாயமாகி இருந்தது. உடனடியாக இது தொடர்பாக டெல்லி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு பல்வேறு இடங்களிலும் போலீஸார் காரைத் தேடி வருகின்றனர்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக கார் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனிடையே ஹரியாணாவின் குருகிராம் நோக்கி அந்த கார் சென்றது சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது. இமாச்சலப் பிரதேச பதிவு எண் கொண்ட அந்த கார், தற்போது எங்கு உள்ளது என்பது தெரியாததால், போலீஸார் பெருங்குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

டெல்லி மாநில போலீஸார்
டெல்லி மாநில போலீஸார்

தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பிரிவு மத்திய அரசின் கீழ் இருந்து வருகிறது. சமீபகாலமாக தலைநகர் டெல்லியில் வாகனங்கள் திருடப்படும் சம்பவங்கள் மிக அதிகளவில் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2023ம் ஆண்டில் 2.5 மடங்கு அதிகளவிலான வாகன திருட்டுகள் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் காலத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம், பாஜகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in