திருப்பூர் குமரனுக்கு திருநீறு பட்டை... வேட்புமனு தாக்கல் செய்ய கிளம்பிய பாஜக வேட்பாளர்!

திருப்பூர் குமரன் சிலைக்கு திருநீறு பட்டை
திருப்பூர் குமரன் சிலைக்கு திருநீறு பட்டை

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது திருப்பூர் குமரன் சிலைக்கு திருநீறு பட்டை பூசப்பட்டிருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறங்கும் ஏ.பி.முருகானந்தம், இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பு மனுவை தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்களுடன் கிளம்பினார். முன்னதாக சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் நினைவிடத்திற்கு சென்ற அவர், அங்கு திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருப்பூர் குமரன் நினைவிடத்தில் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மரியாதை
திருப்பூர் குமரன் நினைவிடத்தில் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மரியாதை

பின்னர் திருப்பூர் குமரன் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து ஆதரவாளர்களுடன் பேரணியாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக சென்றார். வேட்பு மனு தாக்கலுக்கு செல்லும் போது, திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஜமுக்காளம், நூல், பனியன், எவர்சில்வர் பொருட்கள், உள்ளிட்டவற்றை சீர்வரிசை போல் தட்டுகளில் அடுக்கி அவர் எடுத்துச் சென்றிருந்தார். திருப்பூர் மாவட்டத்தில் இந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு தற்போதைய சிபிஐ எம்.பி.,யும் வேட்பாளருமான சுப்பராயன் எவ்வித நலத்திட்டங்களையும் செய்யவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில், அவர் இதனை எடுத்துச் சென்றதாக கூறப்பட்டது.

திருப்பூரில் தயாராகும் பொருட்கள்
திருப்பூரில் தயாராகும் பொருட்கள்

இதனிடையே தீவிர காங்கிரஸ்காரரும், சுதந்திரப் போராட்டத்தில் உயிர்தியாகம் செய்தவருமான திருப்பூர் குமரனின் சிலைக்கு திருநீறு பட்டை பூசப்பட்டிருந்த சம்பவம் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in