வாராணசியில் மீண்டும் மோடி, காந்திநகரில் அமித் ஷா... முதல்கட்டமாக 195 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

பிரதமர் நரேந்திர மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா
பிரதமர் நரேந்திர மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா

நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் களத்தில் முதலாளாக வேட்பாளரை நிறுத்தி எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளது. அந்த வகையில் நேற்று விடிய விடிய, நாடு முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான ஆலோசனை நடைபெற்றிருந்தது.

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டி
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டி

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 195 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை டெல்லியில் பாஜக வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மூத்த தலைவர் மன்சுக் மாண்டவியா குஜராத் மாநிலத்தில் போட்டியிட உள்ளார். மத்திய அமைச்சர் கிரண் ரிஜு ஜூ அருணாச்சல பிரதேச மாநிலம் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

சுரேஷ்கோபி திருச்சூர் தொகுதியில் போட்டி
சுரேஷ்கோபி திருச்சூர் தொகுதியில் போட்டி

80 தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. 34 மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சுரேஷ் கோபி, திருச்சூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள், பன்சூரி ஸ்வராஜ் டெல்லியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பிரதமர் நரேந்திர மோடியே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாடு மாநிலத்திற்கான வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?

ReplyReply allForwardAttendee panel closedLike reaction set to item

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in