ஒடிசா வி.கே.பாண்டியன் மனைவி சுஜாதா ஐஏஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

மனைவி சுஜாதா ஐஏஎஸ் உடன் வி.கே.பாண்டியன்
மனைவி சுஜாதா ஐஏஎஸ் உடன் வி.கே.பாண்டியன்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலது கரமாக இருப்பவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன். ஒடிசா ஐஏஎஸ் அதிகாரியாக உள்ள இவரது மனைவி சுஜாதாவுக்கு எதிராக தற்போது, தேர்தல் ஆணையம் வரை பாஜக முறையிட்டுள்ளது.

ஒடிசாவின் ஆளும் பிஜு ஜனதா தளம்(பிஜேடி) கட்சியின் தேர்தல் ஆதாயங்களுக்காக தனது பதவியை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி, ஒடிசாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை, மிஷன் சக்தி அமைப்பின் ஆணையர் பொறுப்பில் இருந்து விலக்கக் கோரி பாஜக தேர்தல் ஆணையத்திடம் இன்று மனு அளித்துள்ளது.

முதல்வர் நவீன் பட்நாயக் உடன் பாண்டியன்
முதல்வர் நவீன் பட்நாயக் உடன் பாண்டியன்

ஒடிசாவின் ஆளும் பிஜேடி கட்சியின் தலைவரும், முதல்வருமான நவீன் பட்நாயக்கின், ஆட்சி மற்றும் நிர்வாக உதவிகளில் அனைத்துமாக இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன். இவரது முன்னெடுப்பில் மகளிர் சுயஉதவி குழுக்களை உருவாக்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிக்கும் செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நவீன் பட்நாயக்கால் மார்ச் 2001-ல் மிஷன் சக்தி திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த மிஷன் சக்தி வாயிலாக தேர்தல் ஆதாயங்களுக்காக வாக்காளர்களிடம் செல்வாக்கு செலுத்தப்படுவதாகவும், அதிகாரம், அரசு இயந்திரம் மற்றும் ஆள்பலம் பயன்படுத்தப்படுவதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. ஒடிசாவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் ஒருசேர நடப்பதால், வெற்றி வாய்ப்பு குறித்து பாஜக வெகுவாய் கவலை கொண்டுள்ளது.

எனவே இந்த மிஷன் சக்திக்கு பொறுப்பேற்றிருக்கும் சுஜாதாவுக்கு ஒடிசா தேர்தல்கள் முடியும் வரை எந்தப் பொறுப்பும் வழங்கப்படக்கூடாது என்றும் பாஜக கோரியுள்ளது. வி.கே.பாண்டியன் தனது மனைவி மூலமாக, தனது நிர்வாக அனுபவத்தை பயன்படுத்தி தேர்தலில் செல்வாக்கு செலுத்துவார் என்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

கடந்தாண்டு நவம்பரில் தனது ஐஏஎஸ் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பாண்டியன், அதே வேகத்தில் பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். பின்னர் கேபினட் மந்திரி அந்தஸ்துடன் கூடிய மாநிலத்தின் முதன்மைத் திட்டங்களின் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்படி முதல்வருக்கு நெருக்கமாக இருப்பவரின் மனைவியை தேர்தல் முடியும் வரை, செல்வாக்கான பொறுப்புகளில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் எனவும் பாஜக கோருகிறது. இதன் பொருட்டான புகார் மனுவை இன்றைய தினம் தேர்தல் ஆணையத்திடம் ஒடிசா பாஜக தலைவர்கள் வழங்கினர்.

ஒடிசாவில் மே 13 அன்று தொடங்கி ஜூன் 1 வரை, 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 21 மக்களவைத் தொகுதிகளை கொண்ட ஒடிசாவில் 2019 தேர்தலில் 8 இடங்களை வென்ற பாஜக, இம்முறை அந்த எண்ணிக்கையை இரு மடங்காக்க தீவிரமாக உழைத்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...
உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?

நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!

காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in