ஸ்வாதி மலிவால் வழக்குக்கு பயந்து பாஜகவின் சதிக்கு இரையாகியுள்ளார்: அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு

டெல்லி அமைச்சர் அதிஷி
டெல்லி அமைச்சர் அதிஷி

ஸ்வாதி மலிவால் மீதான முறைகேடு வழக்கை வைத்து, பிபவ் குமாருக்கு எதிராக பாஜக சதி செய்துள்ளதாக டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆம் ஆத்மி எம்பி-யும் டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான ஸ்வாதி மலிவாலை, கேஜ்ரிவாலின் உதவியாளர் தாக்கியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பிபவ்குமாரை போலீஸார் இன்று கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கேஜ்ரிவாலுக்கு தேர்தல் நேரத்தில் அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்த, ஸ்வாதி மலிவால் மீதான முறைகேடு வழக்கை பயன்படுத்தி அவரை பாஜக சதியில் சிக்க வைத்துள்ளது என டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்வாதி மலிவால்
ஸ்வாதி மலிவால்

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

"டெல்லி மகளிர் ஆணையத்தில் ஒப்பந்தப் பணியாளர்களை சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்தது தொடர்பாக ஸ்வாதி மலிவால் மீது பாஜகவின் ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனைக்கான நேரம் நெருங்கியுள்ளது.

இந்த வழக்கை பயன்படுத்தி ஸ்வாதி மலிவால் சதியில் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என நம்புகிறோம். உள் துறை அமைச்சகம் முதல் டெல்லி போலீஸ் வரை பாஜகவின் முழு அரசு இயந்திரமும் எப்படி இயங்குகிறது என்பதை நேற்று திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் பார்க்க முடிந்தது.

நேற்று, பிபவ் குமாரின் கோரிக்கையின் பேரில், நேற்று நாள் முழுவதும் நீதிமன்றம், இந்த வழக்கில் எப்ஐஆர் நகலை காவல் துறையிடம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனால் எப்ஐஆர் நகல் கொடுக்கப்படவில்லை. இன்று காலை வரை நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது.

இந்நிலையில் டெல்லி காவல்துறை எப்ஐஆர் சென்சிடிவ் வாய்ந்தது. எனவே அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் கொடுக்க முடியாது என நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

ஆனால் இந்த எப்ஐஆர் அனைத்து ஊடகங்களுக்கும் பாஜகவால் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கொடுக்க முடியாது என பாஜகவின் காவல்துறை கூறுகிறது.”
இவ்வாறு அமைச்சர் அதிஷி கூறினார்.

முன்னதாக ஸ்வாதி மலிவால், காவல் துறையில் அளித்த புகாரில், பிபவ்குமார் முதல்வர் இல்லத்தில் இருந்து தன்னை வெளியே தள்ளியதாகவும், இதில் தனது ஆடைகள் கிழிந்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் இன்று வெளியான சிசிடிவி காட்சிகளில், அதற்கு நேர்மாறாக, பெண் பாதுகாவலர்கள், ஸ்வாதி மலிவாலை முதல்வர் இல்லத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

பெண்களின் முன்னேற்றம் கண்டு அஞ்சுகிறார்... பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

குஸ்தி களமான நாடாளுமன்றம்... எம்.பிக்கள் கட்டிப்புரண்டு சண்டை; அதிர்ச்சி வீடியோ!

வரலாற்றில் இடம் பிடித்த கணினி ஆபரேட்டர்... 5 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது சிக்கினார்!

இசையமைப்பாளர் ரஹ்மான் மகளின் புது அவதாரம்... நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவில் மாஸாக உருவாகும் ‘GOAT'... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in