இசையமைப்பாளர் ரஹ்மான் மகளின் புது அவதாரம்... நெகிழ்ச்சி பதிவு!

ரஹ்மான்
ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மகள் ரஹீமா ரஹ்மான் சமையல் கலையில் பட்டம் பெற்றுள்ளார். இந்த விஷயத்தை நெகிழ்ச்சியாக ரஹ்மான் பதிவிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் மற்றும் மகள் கதீஜா இருவரும் இசைத்துறையில் இருக்கின்றனர். அமீன், ரஹ்மான் இசையில் இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடியிருக்கிறார். ஹலிதா ஷமீம் இயக்கத்தில் கதீஜா ‘மின்மினி’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

ஆனால், இன்னொரு மகள் ரஹீமா சமையல் கலையில் ஆர்வம் கொண்டு அதில் பட்டம் பெற்றுள்ளார். இந்த விஷயத்தை ரஹ்மான் நெகிழ்ச்சியுடன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ’என்னுடைய லிட்டில் கேர்ள் ரஹீமா இப்போது செஃப். தந்தையாக எனக்கு பெருமயான தருணம்’ என்று நெகிழ்ந்திருக்கிறார்.

துபாயில் உள்ள சமையல் கலை பள்ளியில் படித்து பட்டம் பெற்றிருக்கிறார் ரஹீமா. பட்டத்தை தன் மகளுக்கு ரஹ்மான் கொடுத்து நெகிழ்ந்திருக்கிறார். சமீபத்தில் தமிழில் வெளியான ‘அயலான்’, ‘லால் சலாம்’, ‘தி கோட் லைஃப்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார் ரஹ்மான்.

நடிகர் பிரபுதேவா- ரஹ்மான்
நடிகர் பிரபுதேவா- ரஹ்மான்

இவை தவிர இந்தியில் வெளியான ’அமர் சிங் சம்கிலா’ படத்திலும் அவரது இசை பேசப்பட்டது. தமிழில் இவர் பிரபுதேவாவுடன் புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளார். பல வருடங்கள் கழித்து ரஹ்மான் -பிரபுதேவா இணையும் புதிய படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in