அமெரிக்காவில் மாஸாக உருவாகும் ‘GOAT'... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

‘GOAT'
‘GOAT'

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘GOAT' திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் குறித்து இயக்குநர் வெங்கட்பிரபு அப்டேட் கொடுத்திருக்கிறார்.

‘GOAT' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இதற்காக கடந்த வாரத்தில் படக்குழுவினர் அமெரிக்கா கிளம்பி சென்றனர். படத்தில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய். மகன் விஜயை இன்னும் இளமையாகக் காட்ட விஎஃப்எக்ஸ் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் வெங்கட்பிரபு.

இப்போது விஜய் போர்ஷனுக்கான விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. கிரீன் மேட் பின்னணியில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் விஜய் அமர்ந்திருக்கும்படியான புகைப்படத்தை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வெங்கட் பிரபு.

’‘GOAT' படத்தில் விஜய் அண்ணாவுக்கான விஎஃப்எக்ஸ் காட்சிகள் முடிந்திருக்கிறது. அவுட்புட் எப்படி வரும் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்’ எனப் படக்குழுவை டேக் செய்திருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு விஜய் தனது 69வது படத்தில் நடிக்கிறார்.

வினோத்- விஜய்
வினோத்- விஜய்

ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படம் அரசியல் களமாக இருக்கும் என சொல்லப்படும் நிலையில், இதன் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டு முழு நேரமாக அரசியல் பணிகளில் கவனம் செலுத்த உள்ளார் விஜய். இதற்கிடையில் அடுத்த மாதம் தனது பிறந்தநாளுக்கு முன்னதாக 10 மற்றும் 12ம் வகுப்பில் அனைத்து மாவட்டங்களிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in