பாஜகவில் தலைவர்கள் 75 வயதில் அரசியலில் இருந்து விலகும் முடிவை நிர்ணயித்த பிரதமர் மோடிக்கும் அது பொருந்துமா என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு பாஜகவில் ஓய்வு பெறுவதற்கான வயது 75 என்று அவர் (நரேந்திர மோடி) முடிவு செய்துள்ளார். அப்படித்தான் அவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராக பலவந்தமாக முடிவுகளை எடுத்துள்ளார்.
இப்போது நரேந்திர மோடி 74 வயதை கடக்கப் போகிறார். இன்னும் ஓராண்டு உள்ளது. நரேந்திர மோடியிடம் இதே கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். 75 வயதில் ஓய்வு பெற நீங்கள் தயாரா?
ஒரு விஷயத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 1947 முதல் 2014 வரை 14 பிரதமர்கள் கிட்டத்தட்ட 67 ஆண்டுகளாக ரூ.55 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.
ஆனால் பிரதமர் மோடி, ரூ.113 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார். அவர் இந்த நாட்டை அழித்து விட்டார். நாடு ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறது. எனவே இதற்கான பொறுப்பை அவர் ஏற்க வேண்டும்.
பிரதமர் மோடி எந்த ஆவணங்களை சமர்ப்பித்தாலும், நாங்கள் அந்த ஆவணங்களை நம்பப் போவதில்லை. ஏனெனில் அவர் தேர்தலில் வெற்றி பெற எந்த மட்டத்துக்கும் செல்வார். அவருக்கு நேர்மை அல்லது நம்பகத்தன்மை இல்லை” என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார்.
தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 13ம் தேதி நடைபெறும் 4வது கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!
அடுத்த அதிர்ச்சி... சிவகாசியில் மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!
கனமழை: கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் 50 பேர் பலி!
உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி... அள்ளி வழங்கும் அமெரிக்கா!
மனைவி நடத்தையில் சந்தேகம்... 2 குழந்தைகளைக் கொன்று விட்டு கணவனும் தற்கொலை!