அண்ணாமலை நாட்டின் உயர்வுக்கு உழைக்கிறார்- சொல்கிறார் மத்திய அமைச்சர்

அண்ணாமலை நாட்டின் உயர்வுக்கு உழைக்கிறார்- சொல்கிறார் மத்திய அமைச்சர்

தமிழகம் விரும்பும் மாற்றத்தை அண்ணாமலை வழங்குவார். தமிழகத்தின் இளம் தளபதி அண்ணாமலை, நாட்டின் உயர்வுக்காக உழைக்கிறார் என மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுடனான கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம். அதனால் அவர் விரைவில் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. ஆனால் இன்று அண்ணாமலையில் மூன்றாம் கட்ட பாதயாத்திரை தொடங்கிய வைத்து பேசிய மத்திய அமைச்சர் பியூஸ்கோயலின் பேச்சுக்கள், அந்த மாதிரியான எண்ணம் அகில இந்திய தலைமையிடம் இல்லை என்பது போலத்தான் இருக்கிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில், 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாத யாத்திரை நடத்தி வருகிறார். 2ம் கட்ட பாதயாத்திரையின் போது அதிமுக கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பாதயாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அவரின், 3ம் கட்ட பாதயாத்திரை இன்று முதல் துவங்கியது.

பாதயாத்திரை
பாதயாத்திரை

இன்று துவங்கிய பாதயாத்திரையில், மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், எல்.முருகன், பாஜக எம்எல்ஏ வானதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பாதயாத்திரை நிகழ்வில் பேசிய பியூஸ் கோயல், ‘’சனாதன விவகாரத்தில் உதயநிதிக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிக்க வேண்டும். பிரதமர் மோடி, தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை உலக நாடுகளுக்கு கொண்டு செல்கிறார்.

ஊழலின் மொத்த உருவமாக உள்ள திமுக, காங்கிரசை தோற்கடிக்க வேண்டும். தமிழகம் விரும்பும் மாற்றத்தை அண்ணாமலை வழங்குவார். தமிழகத்தின் இளம் தளபதி அண்ணாமலை, நாட்டின் உயர்வுக்கு உழைக்கிறார். தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல, பிரதமருக்கு பின் அண்ணாமலை உழைத்துக் கொண்டிருக்கிறார்’’ என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

பிஎஸ்சி படித்தவர்களுக்கு ரூ.1,40,000 சம்பளத்தில் விமான நிலையத்தில் வேலை!

லீக்கானது ‘லியோ' படத்தின் கதை... படக்குழுவினர் அதிர்ச்சி!

பெற்றோரிடம் ரூ.2 லட்சம் பேரம்; குழந்தையை விற்க முயற்சி- அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்

பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதுமை... 2 திருநங்கைகள் பங்கேற்பு!

எனக்கு அதைத் திருடுற பழக்கம் இருக்கு... நடிகை கீர்த்தி சுரேஷ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in