வைரலாகும் அமித் ஷா காரின் நம்பர் பிளேட்... குடியுரிமை திருத்த சட்டத்தை முரசறைகிறதா?

உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா

மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைக்கும் வரும் என்ற கணிப்புகளுக்கு மத்தியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கார் நம்பர் பிளேட் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மக்களவைத் தேர்தலுக்கான முதல் சுற்று பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்யும் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நேற்றிரவு நடைபெற்றது. கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்றனர். விடிய விடிய நடைபெற்ற இந்த கூட்டத்தில், வட இந்தியாவில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 100 இடங்களுக்கான வேட்பாளர்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டனர்.

மேலும் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, மத்திய அரசு சார்பில் அறிவித்தாக வேண்டிய புதிய திட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அவற்றில் ஒன்றாக, குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏ குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த சிஏஏ நடைமுறையில் தீவிர ஆர்வம் காட்டும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காரில், அதற்கான அடையாளம் இடம்பெற்றிருந்ததே தற்போதைய சமூக ஊடக வைரல் பதிவுகளுக்கு காரணமாயின.

அமித் ஷா கார் மற்றும் நம்பர் பிளேட்
அமித் ஷா கார் மற்றும் நம்பர் பிளேட்

நள்ளிரவு பாஜக தலைவர்கள் கூட்டத்துக்கு வருகை தந்த அமித் ஷாவின் கார் நம்பர் பிளேட் இந்த வைரல் பதிவுகளின் மையமாயின. DL1C AA 4421 என்பது அமித் ஷா காரின் எண்ணாக, அதன் நம்பர் பிளேட்டில் இடம்பெற்றிருக்கிறது. அதிர்ஷ்டம் அல்லது அடையாளத்தின் பொருட்டு, கூடுதல் கட்டண அடிப்படையில் தங்களுக்கான எண்சோதிடம் அல்லது ராசிக்காக, விஐபிக்கள் தங்கள் கார் எண்களை பொருத்திக் கொள்வது வழக்கம். அந்த வகையில் சிஏஏ மீது பிடிப்பு கொண்ட அமித் ஷா, அதனை தனது கார் நம்பர் பிளேட்டில் அதனை அடையாளமாக்கி வலம் வருவதாக வைரல் பதிவுகள் பகிர்கின்றன.

2024 மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டத்தை உள்துறை அமைச்சகம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நாள் உள்ளிட்ட அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்ததுமே இந்த நடத்தை விதிகள் நடைமுறைக்கு வரும். அதற்கு முன்னதாக சிஏஏ அறிவிப்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிஏஏ இதுவரை அமலுக்கு வரவில்லை. சட்டம் நிறைவேற்றப்பட்டது முதலே அது தொடர்பான சர்ச்சையும் ஆதரவும் அதிகரித்தன. எதிர்வரும் தேர்தலில், பாஜகவுக்கு ஆதாயம் தரும் பெரும்பான்மை வாதம் சார்ந்த ஒரு அறிவிப்பாக சிஏஏ அறிவிப்பும், அது தொடர்பான அலையும் இருக்கும் என அரசியல் களத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

மதத்தின் அடிப்படையில் இது பாரபட்சமானது என்றும், தேசிய குடியுரிமைப் பதிவேடு சார்ந்தது என்றும் விமர்சனங்கள் இருந்தபோதும், சிஏஏ அமலில் அமித் ஷா உறுதியாக இருக்கிறார். தேர்தலுக்கு முன்னதாக சிஏஏ கட்டாயம் அமலாகும் என கடந்த மாதம் கூட அவர் அறிவித்திருந்தார். இந்த சூழலில், சிஏஏ பொறித்த அமித் ஷாவின் கார் நம்பர் பிளேட் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

திருக்கடையூரில் தினகரன்... 60 வயது நிறைவையொட்டி மனைவியுடன் வழிபாடு!

பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு சங்கீத நாடக அகாடமி விருது... குவியும் வாழ்த்து!

ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார் அனீஷ் சேகர்... அதிர்ச்சியில் தமிழ்நாடு அரசு!

கட்சி மாறியதால் காட்சிகள் மாறுது... விஜய்வசந்த் டார்கெட்... கன்னியாகுமரி சீட் கன்பார்ம்... விஸ்வரூபமெடுக்கும் விஜயதரணி!

பயங்கரம்... கண்களில் மிளகாய் பொடி தூவி பாஜக எம்.பியின் நண்பர் வெட்டிக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in