பயங்கரம்... கண்களில் மிளகாய் பொடி தூவி பாஜக எம்.பியின் நண்பர் வெட்டிக்கொலை!

பாஜக எம்.பி டாக்டர் உமேஷ் ஜாதவுடன் கொலை செய்யப்பட்ட கிரீஷ் சக்ரா.
பாஜக எம்.பி டாக்டர் உமேஷ் ஜாதவுடன் கொலை செய்யப்பட்ட கிரீஷ் சக்ரா.

கண்களில் மிளகாய் பொடியைத் தூவி பாஜக எம்.பியின் நெருங்கிய நண்பர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கலபுர்கியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் உமேஷ் ஜாதவ்.
டாக்டர் உமேஷ் ஜாதவ்.

கர்நாடகா மாநிலம், கலபுர்கி தொகுதி எம்.பியாக இருப்பவர் டாக்டர் உமேஷ் ஜாதவ். பாஜகவைச் சேர்ந்த இவரின் நெருங்கிய நண்பர் கிரீஷ் சக்ரா.கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கலபுர்கி பிஎஸ்என்எல் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல் ஆலோசனைக்குழு நிர்வாகியாக தனது நண்பர் கிரீஷ் சக்ராவை உமேத் ஜாதவ் தேர்ந்தெடுத்தார். இதற்காக தனது நண்பர்களுக்கு கிரீஷ் சக்ரா நேற்று இரவு விருந்து வைத்துள்ளார்.

கலபுர்கி மாவட்டம் அஃபசல்பூர் தாலுகாவின் சாகனூர் கிராமத்தின் பண்ணையில் இந்த விருந்து நடந்துள்ளது. அப்போது அங்கு அவர்களுக்குள் தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி கிரீஷ் சக்ராவை சிலர் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

கிரீஷ் சக்ரா
கிரீஷ் சக்ரா

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கங்காபுரா போலீஸார் விரைந்து சென்று கிரீஷ் சக்ரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கிரீஷிடன் யார், யார் இருந்தார்கள், யார் அவரைக் கொலை செய்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"அரசியலில் கிரீஷ் முன்னேறுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்த கொலை நடந்துள்ளது. அவரை ஒழிக்க எதிரிகள் கூலிப்படையை அமர்த்தியிருக்க வேண்டும்" என கிரீஷ் சக்ராவின் சகோதரர் சதாசிவ சக்ரா கூறினார்.

பாஜக எம்.பியின் நெருங்கிய நண்பர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கலபுர்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பொதுத்தேர்வில் வெற்றிக்கான முக்கிய குறிப்புகள்!

70 கோடி வெச்சிருந்தா வரலாம்... வேட்பாளர்களுக்கு அதிமுக விதிக்கும் நிபந்தனை!

நள்ளிரவில் மோடி வீட்டில் நடந்த கூட்டம்... 550 வேட்பாளர்கள் பட்டியல் பரிசீலனை!

டாக்காவில் நள்ளிரவில் நடந்த கோரம்... அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ: 43 பேர் உடல் கருகி பலி!

ஆபாச வீடியோ மிரட்டல் விவகாரத்தில் திமுகவுக்குத் தொடர்பா?: தருமபுரம் ஆதீனம் விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in