பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு சங்கீத நாடக அகாடமி விருது... குவியும் வாழ்த்து!

பாம்பே ஜெயஸ்ரீ
பாம்பே ஜெயஸ்ரீ

பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

பாம்பே ஜெயஸ்ரீ
பாம்பே ஜெயஸ்ரீ

இசை, நடனம், நாடகம், பாரம்பரிய கலைகள் மற்றும் பொம்மலாட்ட பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் சங்கீத நாடக அகாடமி விருதுகள் வழங்கப்படும். அதன்படி, 2022 - 23ஆம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இசைப்பிரிவில் பாம்பே ஜெயஸ்ரீக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிருதங்கம் இசைக் கலைஞர் நெய்வேலி நாராயணன், நாட்டுப்புற கலைஞர் விநாயக் கேதேகர், வீணை கலைஞர் விஸ்வேஷ்வரன் உட்பட 98 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாம்பே ஜெயஸ்ரீ
பாம்பே ஜெயஸ்ரீ

இவர்களுக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்க உள்ளார். இதில் விநாயக் கேதேகர், வீணை கலைஞர் விஸ்வேஷ்வரன் ஆகியோருக்கு மிக உயரிய அங்கீகாரமான 'பெலோஷிப்' எனும் அகாடமி ரத்னா அறிவிக்கப்பட்டிருக்கிறது. அகாடமி ரத்னா விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 3 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

கர்நாடாக இசைப்பாடல்கள் மட்டுமல்லாது இளையராஜா, ரஹ்மான், யுவன், ஹாரிஸ் எனப் பலரது இசையமைப்பில் பல தமிழ்த் திரையிசைப் பாடல்களையும் பாடியிருக்கிறார் பாம்பே ஜெயஸ்ரீ. அப்படி இவர் பாடிய பாடல்களில் 'இருவர்’ படத்தில் நறுமுகையே, ‘மின்னலே’ படத்தில் வசீகரா போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். தமிழ் மட்டுமல்லாது இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பாடி இருக்கிறார் பாம்பே ஜெயஸ்ரீ. சமீபத்தில் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு, சிகிச்சைப் பெற்று உடல்நலம் தேறியிருக்கிறார் இவர்.

இதையும் வாசிக்கலாமே...

பொதுத்தேர்வில் வெற்றிக்கான முக்கிய குறிப்புகள்!

70 கோடி வெச்சிருந்தா வரலாம்... வேட்பாளர்களுக்கு அதிமுக விதிக்கும் நிபந்தனை!

நள்ளிரவில் மோடி வீட்டில் நடந்த கூட்டம்... 550 வேட்பாளர்கள் பட்டியல் பரிசீலனை!

டாக்காவில் நள்ளிரவில் நடந்த கோரம்... அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ: 43 பேர் உடல் கருகி பலி!

ஆபாச வீடியோ மிரட்டல் விவகாரத்தில் திமுகவுக்குத் தொடர்பா?: தருமபுரம் ஆதீனம் விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in