கட்சி மாறியதால் காட்சிகள் மாறுது... விஜய்வசந்த் டார்கெட்... கன்னியாகுமரி சீட் கன்பார்ம்... விஸ்வரூபமெடுக்கும் விஜயதரணி!

விஜயதரணி
விஜயதரணி

கட்சி மாறியதால், தேர்தல் திருவிழாவில் காட்சிகளும் மாறுகிறது. நடிகர் சத்தியராஜ் நடித்த ‘ அமைதிப்படை’ படத்தின் வசனத்தைப் போல எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்து வந்த விஜயதரணி வரும் மக்களவைத் தேர்தலில் எம்.பி., வேட்பாளராக போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது என்கிறார்கள். எம்.பி. சீட் வேண்டும்... அதுவும் கன்னியாகுமரியில் வேண்டும் என்று கறார் காட்டியே விஜயதரணி பாஜகவில் சேர்த்துள்ளதாக டெல்லி தலைவர்களுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

பொன். இராதாகிருஷ்ணன்
பொன். இராதாகிருஷ்ணன்

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அது குறித்த பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜகவும் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப தனித்தனியாக செயல்திட்டங்களை தீட்டி, அதனை செயல்படுத்தி வருகிறது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் பல மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே வேட்பாளர் பட்டியலை வெளியிட பாஜக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.  நேற்றிரவு பிரதமர் மோடியின் இல்லத்தில் தேசியத் தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் பிரதமருடன் இது குறித்து ஆலோசனைகளை நடத்தினர். முதல் கட்டமாக முக்கியமான வேட்பாளர்கள் 150 பேர் போட்டியிடும் தொகுதிகள்,  வேட்பாளர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

அவற்றுள் தமிழ்நாட்டில் நெல்லை, கோவை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் நெல்லையில் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்படும் கூடும் என பாஜகவினர் எதிர்பார்க்கிறார்கள். கோவை தொகுதியை குறி வைத்து பலரும் காய் நகர்த்தி வரும் நிலையில் அது யாருக்கு என்பதிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் கட்சியில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த விளவங்கோடு தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் விஜயதரணி, அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். கன்னியாகுமரி தொகுதியில் தனக்கு சீட் வேண்டும் என்று தலைமையிடம் அவர் அழுத்தம் கொடுத்தே கட்சியில் சேர்ந்திருக்கிறார். அந்தத் தொகுதி பாஜகவின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணனின் சொந்த தொகுதி ஆகும்.  பலமுறை அதில் போட்டியிட்டவர் ஒருமுறை வெற்றியும் பெற்றிருக்கிறார்.

விஜயதரணி
விஜயதரணி

ஆனால் பொன். ராதாகிருஷ்ணனின் பெயர், ஆளுநர் தேர்வில் இருப்பதால், இந்த தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் அரசியலில் இருந்து விலக்கப்படுவார் என்றும், கன்னியாகுமரி தொகுதிக்கு விஜயதரணிக்கு சீட் வழங்கப்படும் என்றும் பாஜகவினர் கூறுகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


பொதுத்தேர்வில் வெற்றிக்கான முக்கிய குறிப்புகள்!

70 கோடி வெச்சிருந்தா வரலாம்... வேட்பாளர்களுக்கு அதிமுக விதிக்கும் நிபந்தனை!

நள்ளிரவில் மோடி வீட்டில் நடந்த கூட்டம்... 550 வேட்பாளர்கள் பட்டியல் பரிசீலனை!

டாக்காவில் நள்ளிரவில் நடந்த கோரம்... அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ: 43 பேர் உடல் கருகி பலி!

ஆபாச வீடியோ மிரட்டல் விவகாரத்தில் திமுகவுக்குத் தொடர்பா?: தருமபுரம் ஆதீனம் விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in