தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி... பிரேமலதா விளக்கம்!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

மக்களவைத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து தங்களின் அடுத்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான அரசியலை நடத்தி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்கள் அறிவிப்பிலும் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

இதேபோல் தேமுதிகவும் கூட்டணி பேச்சு வார்த்தைகளை தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக பாஜக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அந்த கட்சி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இன்று தேமுதிகவின் கொடிநாள் கொண்டாடப்படுவதையொட்டி, தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

தேமுதிக தலைமை அலுவலகம்
தேமுதிக தலைமை அலுவலகம்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது தொடர்பாக அடுத்து நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்படும். எங்களுடன் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு வரும் கட்சியினருடன் ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முடிவாகிறது தொகுதிகளின் எண்ணிக்கை... மூன்று கட்சிகளுடன் திமுக பேச்சு!

தமிழகத்தில் எமர்ஜென்சியா...? பகீர் கிளப்பிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

அயோத்தி செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்... பஞ்சாப் முதல்வருடன் ராமர் கோயிலில் வழிபாடு!

தமிழகமே அதிர்ச்சி... ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in