டக்கென காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசனின் மகன்... ஜெர்க்கான அமைச்சர் பெரியசாமி!

அமைச்சர் பெரியசாமியின் காலில் விழுந்த் ஆசி பெற்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் சதீஷ்
அமைச்சர் பெரியசாமியின் காலில் விழுந்த் ஆசி பெற்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் சதீஷ்

திண்டுக்கல்லில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியின் காலில் விழுந்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் ஆசீர்வாதம் பெற்ற சம்பவம் இரு கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சச்சிதானந்தம் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதேபோல் அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் முகமது முபாரக் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இவர்கள் இருவரும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினரும் தொடர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு விடுகின்றனர்.

திண்டுக்கல் சீனிவாசனின் 2வது மகன் சதீஷ்
திண்டுக்கல் சீனிவாசனின் 2வது மகன் சதீஷ்

இதன் ஒரு பகுதியாக 333 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் பாஸ்கு திருவிழா நடைபெற்றது. நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று வாக்குகள் சேகரிப்பதற்காக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலயத்தில் காத்திருந்தனர்.

இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக், திண்டுக்கல் சீனிவாசனின் மகன்களான ராஜமோகன், சதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கு வந்திருந்தனர்.

திண்டுக்கல் பாஸ்கு திருவிழாவில் வாக்கு சேகரிக்க ஒன்றாக காத்திருந்த திமுக, அதிமுக கூட்டணி கட்சியினர்
திண்டுக்கல் பாஸ்கு திருவிழாவில் வாக்கு சேகரிக்க ஒன்றாக காத்திருந்த திமுக, அதிமுக கூட்டணி கட்சியினர்

அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றாக அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொள்ளுமாறு சதீஷிடம் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். இதையடுத்து உடனடியாக பெரியசாமியின் காலில் சதீஷ் விழுந்து ஆசி பெற்றார்.

இதன் பின்பு அங்கு அமர்ந்திருந்தவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென திண்டுக்கல் சீனிவாசன் பாஜகவினருக்கு அழைப்பு விடுக்கவில்லையா என கேள்வி எழுப்பியதால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் காலத்திலும் கட்சி வித்தியாசங்களைக் கடந்து நடைபெற்ற இந்த சம்பவம் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in