பாஜகவில் போட்டியிடும் 417 வேட்பாளர்களில் 116 பேர் மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்கள்... அதிர்ச்சி தகவல்!

மோடி அமித்ஷா
மோடி அமித்ஷா

தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜகவில் போட்டியிடும் வேட்பாளர்களில் 116 பேர் வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்திய அளவில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுகிறது. அதற்கு போட்டியாக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இரு கூட்டணியிலும் சேராமல் பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகள் களம் காணுகின்றன.

பாஜக
பாஜக

முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ல் தொடங்கும் நிலையில், பாஜக பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இதுவரை பாஜக அறிவித்துள்ள 417 வேட்பாளர்களில் 116 வேட்பாளர்கள் வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பாஜகவின் வேட்பாளர்களில் 4-ல் ஒருவர் பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தவர்கள்.

அதிலும் நாடு முழுவதும் செல்வாக்கை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் 37 பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற 6 பேருக்கு சீட் வழங்ப்பட்டுள்ளது. இதன் மூலம் பிறரின் செல்வாக்கிலே பாஜக இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

பிரதமர், அமித்ஷா, நட்டா
பிரதமர், அமித்ஷா, நட்டா

மக்களவை தேர்தலில் போட்டியிட பா.ஜ.க இது வரை 417 வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. மொத்தம் 450 தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. இதில் 116 வேட்பாளர்கள் வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் ஆவர். அவர்களில் அதிகமானோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தவர்கள் ஆவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த 37 பேருக்கும், பாரதிய ராஷ்டிரிய சமிதியில் இருந்து வந்த 9 பேருக்கும், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து வந்த 8 பேருக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த 7 பேருக்கும், அதேபோல பிஜு ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் அதிமுக-வில் இருந்து வந்த தலா 6 பேருக்கு பாஜகவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

பாஜக சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிவற்றை கொண்டு மிரட்டி எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்கள் கட்சியில் இணைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பாஜக வாஷிங் மெஷின் கட்சி என்றும் குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். இந்த நிலையில் தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜகவில் போட்டியிடும் வேட்பாளர்களில் 116 பேர் வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் என்பது, எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல பாஜகவினருக்கே சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in