மு.க.ஸ்டாலின் இதைச் செய்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

கோவையில் அண்ணாமலை பிரசாரம்
கோவையில் அண்ணாமலை பிரசாரம்

கிரிக்கெட் மைதானம் கட்டினால் 4,000 கோடி ரூபாய் அளவிற்கு கமிஷன் அடிக்கலாம் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக அண்ணாமலை களமிறங்கியுள்ளார். அவர் கோவையின் பல்வேறு இடங்களிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சரவணம்பட்டி, கரட்டுமேடு, கேஜி பேக்கரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அவர் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவையில் அண்ணாமலை பிரசாரம்
கோவையில் அண்ணாமலை பிரசாரம்

அப்போது பேசிய அண்ணாமலை, “கோவை மாநகரில் ஏராளமான பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 100 மீட்டருக்கு நடந்து சென்றால் சாலைகள் மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இதையெல்லாம் திமுகவினர் சரி செய்யவில்லை. பாஜக சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தோம். இதைக் கேட்டவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்” என்றார்.

கோவையில் அண்ணாமலை பிரச்சாரம்
கோவையில் அண்ணாமலை பிரச்சாரம்

மேலும், “கிரிக்கெட் மைதானம் எதற்காக காட்டப்படுகிறது என்றால் நான்காயிரம் கோடி ரூபாய் வரை கமிஷன் அடிக்கலாம் என்பதற்காகத்தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் குறைந்தபட்சம் 100 மீட்டருக்கு சேதமடையாத சாலையில் நடந்து சென்றால் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையை மேம்படுத்த ரூ.1,445 கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ஆனாலும் கோவையில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் உள்ளது. குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in