ஜெகன் ரெட்டி ஒய்எஸ்ஆரின் வாரிசு அல்ல; மோடியின் வாரிசு... அண்ணனுக்கு பதிலடி கொடுத்த ஷர்மிளா!

ஒய்.எஸ்.ஷர்மிளா
ஒய்.எஸ்.ஷர்மிளா

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் மஞ்சள் சேலை விமர்சனத்துக்கு அவரது தங்கையும், மாநில காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா பதிலடி கொடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புலிவெண்டுலாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, தனது தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா, மஞ்சள் சேலை அணிந்திருப்பது, அவருக்கு, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் அரசியல் ரீதியான நெருங்கிய தொடர்பு இருப்பதால் தான் என விமர்சித்தார்.

சந்திரபாபு நாயுடுவுடன் ஒய்.எஸ்.ஷர்மிளா (கோப்பு படம்)
சந்திரபாபு நாயுடுவுடன் ஒய்.எஸ்.ஷர்மிளா (கோப்பு படம்)

ஆந்திர பிரதேச அரசியலில் மஞ்சள் நிறம் என்றாலே அது முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை குறிக்கும். இந்நிலையில் ஷர்மிளா மஞ்சள் சேலை அணிந்திருந்ததை குறிப்பிட்டு ஜெகன்மோகன் ரெட்டி இவ்வாறு விமர்சித்தார்.

இந்நிலையில் குண்டூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தனது அண்ணனின் மஞ்சள் சேலை விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ஷர்மிளா, "நான் சந்திரபாபு நாயுடு ஆதிக்கத்தில் செயல்படுகிறேன். நான் மஞ்சள் சேலை அணிந்து சந்திரபாபு நாயுடுவின் ஸ்கிரிப்டை படிக்கிறேன் என்று அவர் (ஜெகன்மோகன் ரெட்டி) கூறுகிறார். மஞ்சள் நிறத்தின் மீது சந்திரபாபு நாயுடுவுக்கு காப்புரிமை இருக்கிறதா என்ன?

தேர்தல் பிரச்சாரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி
தேர்தல் பிரச்சாரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி

ஒய்.எஸ்.ஆர். (ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி) காரு கூட மஞ்சள் ஒரு நல்ல நிறம் என கூறியிருந்தார். மஞ்சள் நிறம் தெலுங்கு தேசம் கட்சியின் சொத்து அல்ல என்றும் அவர் கூறியிருந்தார். ஜெகன் ரெட்டி, நரேந்திர மோடியின் வளர்ப்பு மகன் ஆவார். ஜெகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆரின் வாரிசு அல்ல; மோடியின் வாரிசு” என்றார்.

ஆந்திரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலும் இணைந்து நடத்தப்படுகிறது. மாநில காங்கிரஸ் தலைவரான ஷர்மிளா குண்டூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அம்மாநிலத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் ஓர் அணியாகவும், ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனி அணியாகவும் போட்டியிடுகின்றன. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா ஆகிய கட்சிகள் தனி அணியாக போட்டியிடுகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு... பிரகாஷ் ராஜ், ராகுல் டிராவிட் ஆகியோர் வாக்குகளை செலுத்தினர்

கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?

13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!

பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in